நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2710
Zoom In NormalZoom Out


 

யின் வெண்டேர் முடுக”                    (குறுந்.189)

எனச் சான்றோர் கூறலின்.

“நிலநாவில் திரிதரூஉஉம் நீ்ண்மாடக் கூடலார்
புலநாவில் பிறந்தசொல் புதிதுண்ணும் பொழுதன்றோ
பலநாடு நெஞ்சினேம் பரிந்துநாம் விடுத்தக்கால்
சுடரிழாய் நமக்கவர் வருதுமென் றுரைத்ததை”    (கலி.35)

இது,  பின்பனியிற்  பிரிந்து   இளவேனிலுள்  வருதல்  குறித்தலின்
இருதிங்கள் இடையிட்டது.

“கருவிக் காரிடி யிரீஇய
பருவ மன்னவர் வருதுமென்றதுவே.”          (அகம்.139)

இது, கார்குறித்து வருவலென்றலின் அறுதிங்கள் இடையிட்டது.

‘வேளாப் பார்ப்பான்’   (அகம்.24)   என்பது   “தைஇ  நின்ற
தண் பெயர்   கடைநாட்   பனியிருங்    கங்குல்”  என்றலின்  யாண்
டென்பதூஉம்,  அது   கழிந்ததன்மையின்    அஃது    அகமெனவும்
பட் டதென்பதூஉம் தலைவன் வருதுமென்று காலங் குறித்ததற் கொத்த
வழக்கென்றுணர்க, காவற்பிரிவும், வேந்துறுதொழிலெனவே  அடங்கிற்று,
தன்கொண்ட நாட்டிற்குப்   பின்னும்    பகையுளதாங்கொ    லென்று
உட்கொண்டு காத்தலின்                                   (48)
 

ஏனைப்பிரிவுகளுக்குக் காலவரையறை இதுவெனல்

190. ஏனைப் பிரிவும் அவ்வயின் நிலையும்

இஃது, எஞ்சிய பிரிவிற்கு வரையறை கூறுகின்றது.

(இ-ள்.)     ஏனைப் பிரிவும் அவ்வயின் நிலையும் - கழிந்து நின்ற
தூதிற்கும்  பொருளிற்கும்  பிரிந்து  மீளும் எல்லையும்  யாண்டினதகம்
(எ-று.)

உ-ம் :

“மண்கண் குளிர்ப்ப வீசித் தண்பெயல்
பாடுலந் தன்றே பறைக்குரல் எழிலி
புதன்மிசைத் தளவின் இதன்முட் செந்நனை
நெடுங்குலைப் பிடவமோ டொருங்குபிணி யவிழக்
காடே கம்மென்றன்றே யவல
கோடுடைந் தன்ன கோடற் பைம்பயிர்ப்
பதவின் பாவை முனைஇ மதவுநடை
யண்ண னல்லே றமர்பிணை தழீஇத்
தண்ணறல் பருகித் தாழ்ந்துபட் டனவே
யனையகொல் வாழி தோழி மனைய
தாழ்வின் நொச்சி சூழ்வன மலரும்
மௌவன் மாச்சினை காட்டி