|
அவ்வள வென்றார் ஆண்டுச்செய் பொருளே.” (அகம்.23)
இது பொருட்பிரிவின்கட் கார்குறித்து ஆறு திங்கள் இடையிட்டது.
“நெஞ்சு நடுக்குற” (கலி.24) என்னும் பாலைக்கலியுள் “நடுநின்று செய்பொருண் முற்றுமள வென்றார்” என்றலின் எத்துணையும் அணித்தாக மீள்வலென்றதாம். இவற்றிற்குப் பேரெல்லைவந்த செய்யுள் வந்துழிக் காண்க.
(49)
தலைவன் முதலியோர்க்குரிய மரபு கூறல்
191. யாறுங் குளனுங் காவும் ஆடிப்
பதியிகந்து நுகர்தலும் உரிய வென்ப
இது, தலைவற்குங் காமக்கிழத்தியர்க்குந் தலைவியர்க்கும் உரியதொரு மரபு கூறுகின்றது.
(இ-ள்.)
யாறும்குளனும் காவும் ஆடி - காவிரியுந் தண்
பொருனையும் ஆன்பொருனையும் வையையும் போலும் யாற்றிலும்,
இருகாமத் திணையேரி (பட்டினப்.39) போலுங் குளங்களிலுந்,
திருமருதந் துறைக்காவே (கலி.25) போலுங் காக்களிலும்விளையாடி;
பதி இகந்து நுகர்தலும் உரிய என்ப - உறைபதியைக்
கடந்துபோய் நுகர்ச்சியெய்துதலுந் தலைவற்குங் காமக்கிழத்
தியர்க்குந் தலைவியர்க்கும் உரிய எ-று.
ஏற்புழிக்கோடலால், தலைவியர்க்குச் சிறுபான்மையென்றுணர்க.
“கதிரிலை நெடுவேற் கடுமான் கிள்ளி
மதில்கொல் யானையிற் கதழ்வுநெறி தந்த
சிறையழி புதுப்புனல் ஆடுகம் எம்மொடுங் கொண்மோவெந் தோள்புரை புணையே.”
(ஐங்குறு.78)
இது, காமக்கிழத்திநின் மனைவியோடன்றி யெம்மொடு புணைகொள்ளின் யாமாடுதுமென்று புனலாட்டிற்கு இயைந்தாள் போல மறுத்தது.
“வயன்மல ராம்பற் கயிலமை நுடங்குதழைத்
திதலை யல்குற் றுயல்வருங் கூந்தல்
குவளை யுண்கணேஎர் மெல்லியன்
மலரார் மலிர்நிறை வந்தெனப்
புனலாடு புணர்துறை யாயினள் எமக்கே.” (ஐங்குறு.72)
இது, தலைவி புலவிநீங்கித்
|