நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2717
Zoom In NormalZoom Out


 

யென்றார்     ;   இ ஃது    ஆகுபெயர்.  அசைக்கப்    பட்டது  -
அசையென்பதும்   ஆகுபெயர். ‘நோயுமின்பமும்’  (தொல்.பொ.196)
என்பதனுள்   ‘இருபெயர்  மூன்று  முரியவாக’  என்பதனான்  திணை
மயங்குமென்றும்,    ‘உண்டற்குரிய      வல்லாப்    பொருளை’
(தொல்.பொ.213)
     என்றும்   பிறாண்டுஞ்   சொல்  வேறுபட்டுப்
பொருளுணர்த்துதலும், இறைச்சிப் பொருண் முதலியன நாடக வழக்கின்
வழீஇயவாறுந்,     'தேரும்     யானையும்’     (தொல்.பொ.212) 
‘அறக்கழிவுடையன’   (தொல்.பொ.218)   ‘தாயத்தி    னடையா’
(தொ.பொ.221)
 என்னுஞ்  சூத்திர   முதலியன   உலகியல்வழக்கின்
வழீஇயவாறுங்  கூறி,  அவ்வழு  அமைக்கின்றவாறு   மேலே காண்க.
புறத்திணை  யியலுட்   புறத்திணை   வழுக்கூறி  அகப்பொருட்குரிய
வழுவே ஈண்டுக் கூறுகின்றதென்றுணர்க.

‘இயலா’ என்றதனான் ‘என்செய்வா’ மென்றவழி’ ப் ‘பொன் செய்வா’
மென்றாற்போல    வினாவிற்    பயவாது    இறைபயந்தாற்   போல
நிற்பனவுங்கொள்க.     இன்னும்     அதனானே     செய்யுளிடத்துச்
சொற்பொருளானன்றித்   தொடர்பொருளாற்    பொருள்    வேறுபட
இசைத்தலுங்கொள்க.  அது  சூத்திரத்துஞ்  செய்யுளுள்ளும்  பொருள்
கூறுமாற்றானுணர்க.                                        (1)

முற்கூறிய இருவகையானும் பொருள் வேறுபட்டு
வழீ இயமையுமாறு கூறல்

196. நோயும் இன்பமும் இருவகை நிலையிற்
காமங் கண்ணிய மரபிடை தெரிய
எட்டன் பகுதியும் விளங்க வொட்டிய
உறுப்புடையதுபோ லுணர்வுடையதுபோல்
மறுத்துரைப்பதுபோல் நெஞ்சொடு புணர்த்துஞ்
சொல்லா மரபினவற்றொடு கெழீஇச்
செய்யா மரபின் தொழிற்படுத் தடக்கியும்
அவரவ ருறுபிணி தமபோலச் சேர்த்தியும்
அறிவும் புலனும் வேறுபட நிறீஇ
இருபெயர் மூன்றும் உரிய வாக
உவம வாயிற் படுத்தலும் உவமமோடு
ஒன்றிடத் திருவர்க்கும் உரியபாற் கிளவி.

இது, முற்கூறிய இருவகையானும் பொருள்வேறுபட்டு வழீஇ யமையு