|
மாறு கூறுகின்றது.
(இ-ள்.)
நோயும் இன்பமும் இருவகை நிலையிற் காமம் கண்ணிய மரபிடை தெரிய - துன்பமும் இன்பமுமாகிய இரண்டு நிலைக் களத்துங் காமங் கருதின வரலாற்று முறைமையிடம் விளங்க ; எட்டன் பகுதியும் விளங்க - நகை முதலிய மெய்ப்பாடு எட்டனுடைய கூறுபாடுந் தோன்ற ; அறிவும் புலனும் வேறுபட நிறீஇ இரு பெயர் மூன்றும் உரியவாக - மனவறிவும் பொறியறிவும் வேறுபட நிறுத்தி அஃறிணை யிருபாற்கண்ணும் உயர்திணை மூன்றுபொருளு முரியவாக ; அவரவர் ஒட்டிய உறுப்புடையது போல் உணர்வுடையது போல் மறுத்துரைப்பது போல் நெஞ்சொடு புணர்த்தும் - கூறுகின்ற அவரவர் தமக்குப் பொருந்திய உறுப்பெல்லாம் அதுவுடையது போலவும்
உணர்வு உடையது போலவும் மறுமாற்றம் தருவது போலவும் தந்நெஞ்சொடு புணர்த்துச்சொல்லியும் ; சொல்லாமரபினவற்றொடு கெழீஇச் செய்யாமரபிற் றொழிற்படுத்து அடக்கியும் - வார்த்தை சொல்லா முறைமையுடையன வாகிய புள்ளும் மாவும்
முதலியனவற்றோடே அவை வார்த்தை கூறுவனவாகப் பொருந்தி அவை செய்த லாற்றாத முறைமையினை யுடைய தொழிலினை அவற்றின் மேலே
ஏற்றியும்; உறுபிணி தமபோலச் சேர்த்தியும் -
அச்சொல்லா மரபினவை உற்ற பிணிகளைத் தம்
பிணிக்கு வருந்தின போலச் சார்த்திக்கூறியும்; உவமம் ஒன்றிடத்து உவமவாயிற் படுத்தலும் - அம்மூவகைப் பொருளை உவமஞ்செய்தற்குப் பொருந்து மிடத்து உவமத்தின் வழியிலே சார்த்திக் கூறுதலும் ; இருவர்க்கும் உரியபாற் கிளவி - அத்தலைவர்க்குந் தலைவியர்க்கு முரிய இலக்கணத்திற் பக்கச்சொல் எ-று.
தெரிய விளங்க உரியவாகப் புணர்த்தும் அடக்கியுஞ் சேர்த்தும் அவற்றைப் படுத்தலும் இவ்விருவர்க்குமுரிய பாற்கிளவியென முடிக்க. ‘அவரவ’ ரென்கின்றார் அகத்திணையியலுட் பலராகக் கூறிய தலைவரையுந் தலைவியரையும். ‘இருவ’ ரென்றதும்
அவரென்னுஞ் சுட்டு. நெஞ் சென்னும் அஃறிணை யொருமையைத் தெரியவிளங்
|