நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2720
Zoom In NormalZoom Out


 

என்பதும் அது.

“விசும்புற நிவந்த” (அகம்.131) என்பதனுள்,

“வருக வென்னுதி யாயின்
வாரேன் நெஞ்சம் வாய்க்கநின் வினையே.”

என்பது,     மறுத்துரைப்பதுபோற் றறுகண்மைபற்றிய பெருமிதங்
கூறிற்று.  ஏனை  அச்சமும்  மருட்கையும்  பற்றியன தலைவன் கூற்று
வந்துழிக் காண்க. இவை நெஞ்சை ஆண்பாலாகக் கூறியன.

“மன்றுபாடவிந்து”   (அகம்.128) என்பதனுள் “நெஞ்சம்... தளரடி
தாங்கிய    சென்ற    தின்றே”   என்பது   உறுப்புடையது   போல்
அழுகைபற்றிக் கூறியது.

“குறுநிலைக்  குரவின்”  (நற்.56) என்பது  உறுப்பும்   உணர்வு
முடையதுபோல இளிவரல்பற்றிக் கூறியது.

“அறியவும் பெற்றாயோ வறியாயோ மடநெஞ்சே.” (கலி.123)

இஃது, உணர்வுடையதுபோல் நகைபற்றிக் கூறியது.

“கோடொழி லகலல்குற் கொடியன்னார் முலைமூழ்கிப்
பாடழி சாந்தினன் பண்பின்றி வரினெல்லா
ஊடுவேன் என்பேன்மன் அந்நிலையே அவற்காணிற்
கூடுவேன் என்னுமிக் கொள்கையில் நெஞ்சே.”    (கலி.67)

இது மறுத்துரைப்பதுபோல் உவகைபற்றிக் கூறியது.

“அவர்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவனெஞ்சே
நீயெமக் காகா தது.”                      (குறள்.1291)

இஃது, இளிவரல் பற்றி மறுத்துக் கூறியது. ஏனைய வந்துழிக் காண்க.
இவை நெஞ்சினைத் தலைவி பெண்பாலாகக் கூறியன. இவை  துன்பமும்
இன்பமும்   நிலைக்களமாகக்   காமங்  கண்ணிய  மரபிடைத்  தெரிய
வந்தன.

“கானலுங் கழறாது கழியுங் கூறாது
தேனிமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது
ஒருநீ அல்லது பிறிதுயாதும் இலனே
இருங்கழி மலர்ந்த கண்போல் நெய்தல்
கமழிதழ் நாற்றம் அமிழ்தென நசைஇத்
தண்தா தூதிய வண்டினம் களிசிறந்து
பறைஇ தளரும் துறைவனை நீயே
சொல்லல் வேண்டுமால் அலவ.”             (அகம்.170)

இது சொல்லா மரபின  சொல்லுவனவாக  அழுகைபற்றிக்  கூறியது.
இவை உயர்திணையுமாயிற்று.

“கொங்குதேர் வாழ்க்கை....”                  (குறுந்.2)

என்பது உவகைபற்றிக் கூறியது.

“போர்தொலைந் திருந்தாரைப் பாடெள்ளி நகுவார்போல்
ஆரஞ ருற்றாரை யணங்கிய வந்தாயோ.”       (கலி.120)

இது,   செய்கையில்லாத மாலைப்பொழுதினைச் செய்யா   மரபின்
தொழிற்படுத் தடக்கி உவமவாயிற்படுத்தது.

“தொல்லூழி தடுமாறி” (கலி.129) என்பதனுள்,

“பாய்திரை பாடோவாப் பரப்புநீர்ப் பனிக்கடல்
தூவறத் துறந்தனன் துறைவனென் றவன்திறம்
நோய்தெற உழப்பார்கண் இமிழ்தியோ எம்போலக்
காதல்செய் தகன்றாரை யுடையையோநீ ;
மன்றிரும் பெண்ணை மடல்சேர் அன்றில்
நன்றறை கொன்றனர் அவரெனக் கலங்கிய
என்துயர் அறிந்தனை நரறியோ எம்போல
இன்றுணைப் பிரிந்தாரை யுடையையோ நீ ;
பனியிருள் சூழ்தரப் பைதலஞ் சிறுகுழல்