|
எனக் கடலும் அன்றிலுங் குழலும் உற்ற
பிணியைத் தம் பிணிக்கு வருந்தினவாகச்
சேர்த்தி உயர்திணையாக்கி உவம
வாயிற்படுத்தவாறு காண்க.
‘ஒன்றிடத்’ தென்றார்
வேண்டியவாறு உவமங்கோட லாகா
தென்றற்கு. பகுதியைப் ‘பால்கெழு
கிளவி’ (தொல்.பொ.5) என
மேலும் ஆளுப. ‘காமங்கண்ணிய’
என்றதனாற் கைக்கிளையும்
பெருந்திணையுமாகிய காமத்திற்கு வருவனவுங் கொள்க.
“சென்றதுகொல் போந்ததுகொல்
செல்வி பெறுந்துணையும் நின்றதுகொ
னேர்மருங்கிற் கையூன்றி - முன்றின் முழங்குங்
கடாயானை மொய்ம்மலர்த்தார் மாறற் குழந்துபின்
சென்றவென்
னெஞ்சு.
(முத்தொள்.)
இது, கைக்கிளைக்கண்
உறுப்புடையதுபோல்
அவலம்பற்றி நெஞ்சினைக் கூறியது.
“ஓங்கெழிற் கொம்பர் நடுவி
தெனப்புல்லுங் காந்தட் கிவருங் கருவிளம்
பூக்கொள்ளும் மாந்தளிர்க் கையில் தடவரும்
மாமயில் பூம்பொழில் நோக்கிப் புகுவனபின்
செல்லும் தோளெனச் சென்று துளங்கொளி
வேய்தொடும் நீள்கதுப் பிஃதென நீரறல்
உட்புகும் வாளொளி முல்லை முகையை முறுவலென் றாள்வலி
மிக்கான் அஃதறி கல்லான்”
என்றாற்போல் உயர்திணையாக
உவமவாயிற்படுத்த பெருந்திணையாய்
வருவனவுங் காண்க. இஃது அவலம்.
முற்கூறிய நிலைமைகள் கனவின்கண்ணு நிகழுமெனல்
197. கனவும் உரித்தால்
அவ்விடத்தான.
இது, மேற்கூறிய நிலைமைகள்
கனவின்கண்ணும் நிகழு மெனப் பகுதிக்கிளவி
கூறுகின்றது.
(இ-ள்.)
அவ்விடத்தான - முன்னர் வழுவமைத்த
நிலைமையின் கண்ணே வந்தன ; கனவும்
உரித்தால் - கனவும் உரித்தாயிருந்தது முந்து
நூற்கண் எ-று.
எனவே, யானுங் கூறுவலென்றார்.
“அலந்தாங் கமையலேன் என்றானைப்
பற்றியென் நலந்தாரா யோவெனத் தொடுப்பேன்
போலவும் கலந்தாங் கேயென் கவின்பெற
முயங்கிப் புலம்பல் ஓம்பென அளிப்பான்
போலவும் ;
முலையிடைத் துயிலும் மறந்தீத்
தோயென நிலையழி நெஞ்சத்தேன் அழுவேன்
|