நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2729
Zoom In NormalZoom Out


 

தலாய் அடங்கும்.

“உரவுச் சினஞ்செருக்கித் துன்னுதொறும் வெகுளும்
முளைவாள் எயிற்ற வள்ளுகிர் ஞமலி
திளையாக் கண்ண வளைகுபு நெரிதர
நடுங்குவன மெழுந்து நல்லடி தளர்ந்தியாம்
இடும்பைகூர் மனத்தேம் மருண்டு புலம்படர
மாறுபொரு தோட்டிய புகல்வின் வேறுபுலத்து
ஆகாண் விடையின் அணிபெற வந்தெம்
அலமர லாயிடை வெரூஉதல் அஞ்சி
மெல்லிய இனிய மேவரக் கிளந்தெம்
ஐம்பால் ஆய்கவின் ஏத்தி யொண்தொடி
அசைமென் சாயல் அவ்வாங் குந்தி
மடமதர் மழைக்கண் இளையீர் இறந்த
கெடுதியும் உடையேன் என்றனன்”     (குறிஞ்சிப்.130-142)

என நாய் காத்தவாறும்,

“கணைவிடு புடையூக் கானங் கல்லென
மடிவிடு வீளையர் வெடிபடுத் தெதிரக்
கார்ப்பெயல் உருமிற் பிளிறிச் சீர்த்தக
இரும்பிணர்த் தடக்கை இருநிலஞ் சேர்த்திச்
சினந்திகழ் கடாஅஞ் செருக்கிமரங் கொல்பு
மையல் வேழம் மடங்கலின் எதிர்தர
உய்விடம் அறியே மாகி யொய்யெனத்
திருந்துகோல் எல்வளை தெளிர்ப்ப நாணுமறந்து
விதுப்புறு மனத்தேம் விரைந்தவற் பொருந்திச்
சூருறு மஞ்ஞையி னடுங்க வார்கோல்
உடுவுறு பகழி வாங்கிக் கடுவிசை
அண்ணல் யானை அணிமுகத் தழுத்தலிற்
புண்ணுமிழ் குருதி முகம்பாய்ந் திழிதரப்
புள்ளி வரிநுதல் சிதைய நில்லா
தயர்ந்துபுறங் கொடுத்த பின்னர் நெடுவேள்
அணங்குறு மகளி ராடுகளங் கடுப்பத்
திண்ணிலைக் கடம்பின் திரளரை வளைஇய
துணையறை மாலையிற் கைபிணி விடேஎம்
நுரையுடைக் கலுழி பாய்தலின் உரவுத்திரை
அருங்கரை வாழையின் நடுங்கப் பெருந்தகை
அஞ்சில் ஓதி யசையல் எனைய தூஉம்
அஞ்சல் ஓம்புநின் அணிநலங் காக்கென
மாசறு சுடர்நுதல் நீவி நீடுநினைந்
தென்முக நோக்கி நக்கனன்,,,,”        (குறிஞ்சிப்.160-183)

எனக்