நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2730
Zoom In NormalZoom Out


 

களிறு காத்தவாறும், புனலுள் எடுத்தவாறுங் காண்க.

“புலிபுலி யென்னும் பூசல் தோன்ற
,,,,நிற்றந் தோனே.”                        (அகம்.48)

இது, புலிகாத்தற்கு வந்தானென இட்டுரைத்தது.

“அன்னாய் வாழிவேண் டன்னை என்னை
தானு மலைந்தான் எமக்குந் தழையாயின
பொன்வீ மணியரும் பினவே
யென்ன மரங்கொலவர் சார லவ்வே.”        (ஐங்குறு.201)

இது, தோழி தழைதந்தானென அறத்தொடு நின்றது.

“சுள்ளி சுனைநீலஞ் சோபா லிகைசெயலை
அள்ளி அளகத்தின் மேலாய்ந்து-தெள்ளி
இதணாற் கடியொடுங்கா ஈர்ங்கடா யானை
உதணாற் கடிந்தான் உளன்.”             (திணை.நூற்.2)

இதனுள் அளகத்தின் மேலாய்ந்தெனவே பூத்தந்தமை கூறினாள்.

“பிறிதொன் றின்மை யறியக் கூறிக்
கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வ நோக்கிக்
கடுஞ்சூள் தருகுவல் நினக்கே.”              (அகம்.110)

இது தலைப்பாடு.

“நேரிறை முன்கை பற்றி நுமர்தர
நாடறி நன்மணம் அயர்கஞ் சின்னாள்
கலங்கல் ஓம்புமின் இலங்கிழை யீரென
ஈர நன்மொழி தீரக் கூறித்
துணைபுணர் ஏற்றின் எம்மொடு வந்து
துஞ்சா முழவின் மூதூர் வாயில்
உண்டுறை நிறுத்துப் பெயர்ந்தனன் அதற்கொண்
டன்றை அன்ன விருப்போ டென்றும்
இரவரன் மாலையனே வரு தோறுங்
காவலர் கடுகினுங் கதநாய் குரைப்பினும்
நீதுயில் எழினும் நிலவுவெளிப் படினும்
வேய்புரை மென்தோள் இன்துயில் என்றும்
பெறாஅன் பெயரினும் முனிய லுறாஅன்
இளமையின் இகந்தன்றும் இலனே.”    (குறிஞ்சிப்.231-244)

எனவும்,

“வளமையில் தன்நிலை திரிந்தன்றும் இலனே.”
                                     (குறிஞ்சி.245)

எனவும்,

“கன்மழை பொழிந்த அகன்கண் அருவி
ஆடுகழை அடுக்கத் திழிதரு நாடன்
பெருவரை யன்ன திருவிறல் வியன்மார்பு
முயங்காது கழிந்த நாளிவண்
மயங்கிதழ் மழைக்கண் கலுழும் அன்னாய்”   (ஐங்குறு.220)

என வருவன உண்மைசெப்பல்.

“காமர் கடும்புனல்” (கலி.39) என்பதனுள் இரண்டு வந்