நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2731
Zoom In NormalZoom Out


 

தன. பிறபுமன்ன.                                      (13)

தோழி அறத்தொடு நிற்றல் தலைவி விருப்பத்தான்நிகழுமெனல்

208. உற்றுழி அல்லது சொல்லல் இன்மையின்
அப்பொருள் வேட்கைக் கிழவியின் உணர்ப.

இது, மேலதற்கொரு புறனடை.

(இ-ள்.) உற்றுழி அல்லது சொல்லல் இன்மையின் - தலைவியர்க்கு
ஏதமுற்ற   இடத்தன்றித்   தோழியா  அவ்வாறு  மறை  புலப்படுத்துக்
கூறாராதலின்;  அப்பொருள் வேட்கைக்கிழவியின் உணர்ப - அம்மறை
புலப்படுத்துதல்  விருப்பத்தைத்  தலைவியர்  காரணத்தான்  தோழியர்
உணர்வர் எ-று.

‘உணர்ப’  என்று உயர்திணைப் பன்மையாற் கூறவே தலைவியருந்
தோழியரும்  பலரென்றார்.  ‘கிழவி’ யென்றாரேனும் “ஒருபாற் கிளவி”
(தொல்.பொ.222)
 யென்பதனாற்  பன்மையாகக்  கொள்க.  உயிரினுஞ்
சிறந்த   நாணுடையாள்   (113)  இது  புலப்படுத்தற்கு  உடம்படுதலின்
வழுவாயமைந்தது.

“மற்று
இன்னுயிர் கழிவ தாயினும் நின்மகள்
ஆய்மலர் உண்கண் பசலை
காம நோயெனச் செப்பா தீமே.”             (அகம்.52)

என்றாற்போல்வனவே  இலக்கணமென்பது மேலிற்   சூத்திரத்தாற்
கூறுப.
                                                 (14)

அறத்தொடு நிற்றல் வழுவென்றற்குக் காரணங் கூறல்

209. செறிவும் நிறையஞ் செம்மையுஞ் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பா லான.

இது,     மறைப்புலப்படாமல்  ஒழுகுதல்    இலக்கணமென்றற்கும்
மறைபுலப்படுத்துதல் வழுவென்றற்குங் காரணம் கூறுகின்றது.

(இ-ள்.)     செறிவும்-அடக்கமும்;   நிறைவும்-மறைபுலப்  படாமல்
நிறுத்தும் உள்ளமும்; செம்மையும்-மனக்கோட்ட  மின்மையும்:  செப்பும்
-    களவின்கட்    செய்யத்    தகுவன    கூறலும்;   அறிவும்   -
நன்மைபயப்பனவுந்  தீமை பயப்பனவும் அறிவித்தலும்; அருமையும் -
உள்ளக்கருத்தறித   லருமையும்;   பெண்பாலான  -   இவையெல்லாம்
பெண்பாற்குக் காரணங்கள் எ-று.

இவையுடையளெனவே     மறைபுலப்படுத்தற்கு   உரியளல்ல
ளென்பதூஉம் அதனைப் புலப்படுத்தலின் முற்கூறியன வழுவமைத்தன
வுமாயிற்று. இவை வருஞ்சூத்திரத்திற்கும் ஒத்தலிற் சிங்கநோக்கு.   (15)

வரைதல் வேட்கைக்குரிய கூற்றுக்கள் இவையெனல்

210. பொழுதும் ஆறுங் காப்புமென் றிவற்றின்
வழுவின் ஆகிய குற்றங் காட்டலும்
தன்னை யழிதலும் அவனூ றஞ்சலும்
இரவினும் பகலினும் நீவர