நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2732
Zoom In NormalZoom Out


 

ல் என்றலுங்
கிழவோன் தன்னை வாரல் என்றலும்
நன்மையுந் தீமையும் பிறிதினைக் கூறலும்
புரைபட வந்த அன்னவை பிறவும்
வரைதல் வேட்கைப் பொருள என்ப.

இதுவும் தோழிக்குந் தலைவிக்கும் உரியனவாகிய வழுவமைக்கின்றது.

(இ-ள்.) பொழுதும் ஆறும் காப்பும் என்றிவற்றின் வழுவின் ஆகிய
குற்றங்  காட்டலும்  - இராப்பொழுதும் அக்காலத்துவழியுங் கண்ணுறும்
இடத்துள்ள  காவலுமென்று கூறப்பட்டவை மூன்றனது பழையமுறையிற்
பிறழுதலாற் தலைவன்குளதாகிய குற்றத்தை யுணர்த்தலும்:

இவை தலைவற்கு அச்சம் உளவாகக் கருதுதலும் அவனால் நிகழும்
இன்பத்தைத்   துன்பமாகக்   கருதுதலும்   உடையனவாயிற்  றேனும்
அன்புபற்றிக்   கூறலின்    அமைந்தது.    அப்பொழுதிற்றலைவனது
செலவுவரவு நிகழ்ந்துழியே இக்குற்றங் காட்டுவதென்று கொள்க.

“மன்றுபா டவிந்து,,,,,,,,,”                   (அகம்.128)

என்பது பொழுது வழுவுதலிற் குற்றங்காட்டியது.

“ஈர்ந்த ணாடையை எல்லி மாலையை
சோர்ந்துவீழ் கதுப்பினாள் செய்குறி நீவரின்
ஒளிதிகழ் ஞெகிழியர் கவணையர் வில்லர்
களிறென ஆர்ப்பவர் ஏனல்கா வலரே.”         (கலி.52)

இது. காப்பினான் வழுவுணர்த்தியது.

தன்னை    அழிதலும் - அவன் அக்காலத்து அவ்வழியில் தனியே
வருதற்கு    யான்    ஏதுவாயினேன்    எனத்    தன்னை   அழிவு
படுத்துரைத்தலும்:

“நீதவ றுடையையும் அல்லை நின்வயின்
ஆனா அரும்படர் செய்த
யானே தோழி தவறுடை யேனே.”            (அகம்.72)

அவன் வரவினை உவவாது துன்பங்கூர்தல் வழுவாயினும். அதுவும்
அவன்கண் அன்பாதலின் அமைத்தார்.

அவண்  ஊறு அஞ்சலும் - அவ்வழியிடத்துத்  தலைவற்கு  வரும்
ஏதமஞ்சுதலும்:

“அஞ்சுவல் வாழியைய ஆரிருள்
கொங்கியர் ஈன்ற மைந்தின்
வெஞ்சின உழுவை திரிதருங் காடே.”

இஃது. அவனைப் புலிநலியுமென்று அஞ்சியது.

“ஒருநாள் விழுமம் உறினும் வழிநாள்
வாழ்குவள் அல்லளென் றோழி”              (அகம்.18)

என்பதும் அது.

ஆறின்னாமையாவது   விலங்குமுதலியவற்றான் வரவிற்கு இடையீடு
நிகழுமென்   றஞ்சுதல்.   ஏத்தல்,   எளித்தலின்   வேறாயிற்று.  இது
நன்குமதியாமையின் வழுவாயினும் அன்பு மிகுதியான் அமைத்தார்.

இரவினும்   பகலினும்   நீ   வரல் என்றலும் -  இராப்பொழுதின்
கண்ணும்