|
தே.”
இது நொதுமலர் வரைவு சிறைப்புறமாகக் கூறியது.
“கடம்புங் களிறும் பாடித் தொடங்குபு
தோடுந் தொடலையுங் கைக்கொண் டல்கலும்
ஆடினர் ஆதல் நன்றோ?”
(அகம்137)
என்பது தலைவற்கு வெறியாட்டுணர்த்தியது.
வரைதல் வேட்கைப் பொருள என்ப - தலைவன் வரைந்து கோடற்கண் நிகழும் விருப்பத்தைத் தமக்குப் பொருளாகவுடைய என்றவாறு.
என்றது, வழுப்படக் கூறினும் வரைவுகாரணத்தாற் கூறலின் அமைக்க வென்றவாறாம்.
(16)
கைக்கிளை பெருந்திணைக்கட்படுவதொரு வழுவமைக்கின்றது
211. வேட்கை மறுத்துக் கிளந்தாங் குரைத்தல்
மரீஇய மருங்கின் உரித்தென மொழிப.
இது, நடுவணைந்திணையல்லாத
கைக்கிளை பெருந்திணைக் கட்படுவதொரு வழுவமைக்கின்றது.
(இ-ள்.)
வேட்கை மறுத்து - தம் மனத்து வேட்கையை மாற்றி; ஆங்குக் கிளந்து உரைத்தல் - இருவரும் எதிர்ப்பட்டவிடத்துத் தாம் ஆற்றின தன்மையைப் புலப்படக் கூறி ஒருவர் ஒருவர்க்கு அறிவித்தல்; மரீஇய மருங்கின் உரித்தென மொழிப - புலனெறி வழக்கஞ்செய்து மருவிப்போந்த கைக்கிளைப் பெருந்திணைக்கண் உரித்தென்று
கூறுவர் ஆசிரியர் எ-று.
‘கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய்’
(தொல்.அகத்.1)
என அவை இருமருங்கும் நிற்றலின் ஈண்டு மருங்கென்றார்.
“தமக்கினி தென்று வலிதிற் பிறர்க்கின்னா
செய்வது நன்றாமோ மற்று.”
(கலி.62)
இஃது, அடியோர் தலைவராயவழித்
தலைவி வேட்கை மறுத்துணர்த்தியது.
“எறித்த படைபோன் முடங்கி மடங்கி
நெறித்துவிட் டன்ன நிறையேரால் என்னைப்
பொறுக்கல்லா நோய்செய்தாய் பொறீஇ நிறுக்கல்லேன்
நீநல்கின் உண்டென் னுயிர்”
(கலி.94)
“உழுந்தினுந் துவ்வாக் குறுவட்டா நின்னின்
இழிந்ததோ கூனின் பிறப்பு.”
(கலி.94)
இவை, அடியோர் தலைவராக வேட்கை மறுத்துணர்த்தியது. பெருந்திணை.
ஏனை வினைவல பாங்கினோர்க்கு வந்துழிக்
காண்க. இவை கைகோளிரண்டன்கண்ணும் வழங்குதல் சிறுபான்மையுரித்தென்று அகத்திணைக்கட் கூறலின் வழுவமைத்தார். ‘ஒன்றென முடித்த’லான் மரீஇயவா
|