நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2738
Zoom In NormalZoom Out


 

தலைவி   உடன்போகக் கருதியவழித்  தலைவனுஞ் சுரமெனக் கூறுதல்
கொள்க.

“எல்வளை யெம்மொடு நீவரின் யாழநின்
மெல்லியல் மேவந்த சீறடித் தாமரை
அல்லிசேர் ஆயித ழரக்குத்தோய்ந் தவைபோலக்
கல்லுறின் அவ்வடி கறுக்குந வல்லவோ”         (கலி.13)

என வரும்.                                             (22)

உலகவழக்கு செய்யுட்குமாமெனல்

217. உயர்ந்தோர் கிளவியும் வழக்கொடு புணர்தலின்
வழக்குவழிப் படுத்தல் செய்யுட்குக் கடனே

இது,   முன்னர்   உலகியல்   வழக்கென்றது   செய்யுட்காமென்று
அமைக்கின்றது.

(இ-ள்.) உயர்ந்தோர் கிளவியும் வழக்கொடு புணர்தலின் - உயர்ந்த
மக்கள்    கூறுங்கூற்றும்    வேதநெறியொடு    கூடுதலின்;   வழக்கு
வழிப்படுத்தல்  செய்யுட்குக்  கடனே  -  அவ்வழக்கினது  நெறியிலே
நடத்தல் செய்யுட்கு முறைமை எ-று.

‘வழக்கெனப்     படுவது’  (தொல்.பொ.648)  என்னும்  மரபியற்
சூத்திரத்தான்    வழக்கு    உயர்ந்தோர்    கண்ணதாயிற்று.   அவர்
அகத்தியனார்   முதலியோரென்பது   பாயிரத்துட்  கூறினாம்.  அவை
சான்றோர்  செய்யுளுட்  காண்க.  இதனை  மேலைச் சூத்திரத்திற்கும்
எய்துவிக்க.                                             (23)

உலகியலல்லாதனவும் பயன்படவரின்
புலனெறிவழக்கிற்கூறல் வழுவன்றெனல்

218. அறக்கழிவு உடையன பொருட்பயம் படவரின்
வழக்கென வழங்கலும் பழித்தன் றென்ப.

இஃது, உலகியல் வழக்கன்றிப் பொருள் கூறினும் அமைகவென்றது.

(இ-ள்.)   அறக்கழிவு உடையன - உலக வழக்கத்திற்குப் பொருத்த
மில்லாத  கூற்றுக்கள்;  பொருட்பயம்  படவரின்  -  அகப்பொருட்குப்
பயமுடைத்தாக   வருமாயின்;  வழக்கென  வழங்கலும்  -  அவற்றை
வழக்கென்றே  புலனெறி  வழக்கஞ்  செய்தலும்;  பழித்தன்று என்ப -
பழியுடைத்தன்றென்று கூறுவாராசிரியர் எ-று.

தலைவன்     குறையுற்று  நிற்கின்றவாற்றைத் தோழி தலைவிக்குக்
கூறுங்கால்    தன்னை    அவன்   நயந்தான்போலத்   தலைவிக்குக்
கூறுவனவும். “பொய்யாக வீழ்ந்தே னவன்மார்பின்” (கலி.37) எனப்
படைத்து  மொழிவனவுந்.  தலைவி ‘காமக ் கிழவ னுள்வழிப் படுதலும்’
‘தாவி னன்மொழி கிழவி கிளத்தலும்’ (தொல்.பொ.115)  போல்வன
பிறவும் அறக்கழிவுடையனவாம். தலைவி தனக்கு மறை