|
புலப்படுத்தாது வருந்துகின்ற காலத்து
அதனைத் தனக்குப் புலப்படுவித்துக்கொண்டே அவளை ஆற்றுவித்தற்
பொருட்டு அறக்கழிவுடையன கூறலின் அவை பொருட்குப் பயன்றந் தனவாம்.
“நெருந லெல்லை யேனற் றோன்றி” (அகம்.32)
என்பதனுட்,
“சிறுபுறங் கவையின னாக வதற்கொண்
டிகுபெயன் மண்ணின் ஞெகிழ்பஞ ருற்றவென்
உள்ளவ னறித லஞ்சி யுள்ளில்
கடிய கூறிக் கைபிணி விடாஅ”
எனத் தலைவன் தன்னை நயந்தானென இவள் கொண்டாள் கொல்லெனத் தலைவி கருதுமாற்றான் தோழி கூறவே தலைவி மறை புலப்படுத்துவ ளென்பது பயனாயிற்று.
“கயமலருண்கண்ணாய்,,, அங்க ணுடைய னவன்” (கலி.37) என்பதனுள் “மெய்யறியா தேன்போற் கிடந்தேன்” என்புழி முன்னர் மெய்யறி வழிநிலை பிழையாமனின்று பின்னர்ப் பொய்யாக வழிநிலை பிழைத்துக் கூறியது வழுவேனும் இவளுந் தலைவனும் இவ்வாறே செறிந்தமை யுணர்த்தலின் மறைபுலப்படுத்துங் கருத்தினளாந் தலைவி யென்பது பயனாம்.
“மள்ளர் குழீஇய விழவி
னானும்” (குறுந்.31)“
அருங்கடியன்னை” (நற்.365) “பாம்பு மதனழியும்
பானாள்
கங்குலும், அரிய வல்லமன் இகுளை” (அகம்.8) என்பனவற்றுள்
தலைவி தேடிச் சென்றதுஞ் செல்வாமென்றதுஞ் சிறைப்புறமாக
வரைவுகடாயது. பொருட்பயன் றருதலின் அறக்கழிவுடைய
வேனும்
அமைந்தன.
இது, ‘பல்வேறு கவர்பொரு ணாட்டத்தான்’ (தொல்.பொ.114) அறக்கழிவுடையனவுங் கூறப்பெறுமென்றமைப்பது பெரும்பான்மை. இஃது அதிகாரத்தாற் றோழிக்குந் தலைவிக்குங் கொள்க.
(24)
மேலதற்கொரு புறனடை
219. மிக்க பொருளினுட் பொருள்வகை புணர்க்க
நாணுத்தலைப் பிரியா நல்வழிப் படுத்தே.
இது, மேல் அறக்கழிவுடைத்தாயினுமம்அது பொருட் பயம்படு மென்றார், அப்பொருளினை இது வென்றலின் மேலதற்கொரு புறனடை.
(இ-ள்.)
மிக்க பொருளினுள் - முன்னர் அகப்பொருட்குப் பயம் பட
|