நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2745
Zoom In NormalZoom Out


 

திரிபு   இன்று என்மனார் புலவர் - அவ்வொழுக்கம் பெரும்பான்மை
மருதநிலத்தினின்றுந் திரிந்துவருதல் இன்றென்று கூறுவர் புலவர் எ-று.

‘பரத்தைவாயி’லென்றது குதிரைத்தேர்போல நின்றது, இதனாற் பயன்
அந்தணர்க்கு    நால்வரும்    அரசர்க்கு    மூவரும்    வணிகர்க்கு
இருவருமாகிய தலைவியர்  ஊடற்குரிய ரென்பதூஉம் அவர்பால் தத்தந்
தலைவர் ஊடறீர்த்தற்குரிய வாயில் விடுவ ரென்பதூஉம், அவர் வாயின்
மறுத்தலும்  நேர்தலும்  உடைய  ரென்பதூஉம், ஏனைப் பரத்தையர்க்கு
வாயில் விடுதல்  இன்றென்  பதூங் கூறியவாறாயிற்று. ‘ஒருபாற்கிளவி’
(தொல்.பொ.222)
  என்பதனான்   ஒரோவோர்குலத்துத்   தலைவருந்
தலைவியரும்   அடங்குமாறுணர்க.   உதாரணம்   முற்காட்டியவற்றுட்
காண்க.  ஒருவனும் ஒருத்தியுமாகி இன்பநுகர்ந்து இல்லற நிகழ்த்துதலே
சிறந்ததென்றற்கு    இங்ஙனம்    பலராதல்   வழுவென்று   அதனை
அமைத்தார்.                                            (30)

களவின்கண் தலைவிகண் நிகழும் வழு அமைதி இவை எனல்

225. ஒருதலை உரிமை வேண்டியும் மகடூஉப்
பிரித லச்சம் உண்மை யானும்
அம்பலும் அலருங் களவுவெளிப் படுக்குமென்று
அஞ்ச வந்த ஆங்கிரு வகையினும்
நோக்கொடு வந்த இடையூறு பொருளினும்
போக்கும் வரைவும் மனைவின்கண் தோன்றும்.

இது, களவின்கட் டலைவியின்கண் நிகழ்வதொரு வழுவமைக்கின்றது.

(இ-ள்.)     உரிமை ஒருதலை  வேண்டியும் - இடைவிடாது இன்ப
நுகர்தலோடு  இல்லறநிகழ்த்தும்  உரிமையை  உறுதியாகப்  பெறுதலை
விரும்புதலானும்;   பிரிதல்   அச்சம்   மகடூஉ  உண்மை  யானும்  -
ஆள்வினைக்

குறிப்புடைமையின்     ஆண்மக்கள் பிரிவரென்று அஞ்சும் அச்சம்
மகளிர்க்  குண்டாகையினாலும்;  ஆங்கு  அம்பலும்   அலரும்  களவு
வெளிப்படுக்கும்     என்று     அஞ்சவந்த    இருவகையினும்    -
அக்களவொழுக்கத்திடத்தே    அம்பலும்    அலரும்    இக்களவைப்
புலப்படுக்குமென்று  அஞ்சும்படி  தோன்றிய இருவகைக்  குறிப்பானும்;
நோக்கொடு   வந்த   இடையூறு   பொருளினும்   -  பிறர்  தன்னை
அயிர்த்துநோக்கும் நோக்கங்