நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2746
Zoom In NormalZoom Out


 

காரணமாக     வந்த    கூட்டம்   இடையூறுற்ற   காரியத்தினாலும்;
மனைவிகண்   போக்கும்  வரைவும்  தோன்றும்  -  தலைவியிடத்தே
உடன்போக்கும் வரையக் கருதுதலுந் தோன்றும் எ-று.

“வழையம லடுக்கத்து” (அகம்.328) என்பதனுண் “முகந்து கொண்
டடக்குவம்”    என    இடைவிடாது   இன்பநுகர   விரும்பியவாறும்
உள்ளுறையான் இல்லற நிகழ்ந்த விரும்பியவாறு காண்க.

“உன்னங் கொள்கையொடு”               (அகம்.65)

என்பது அம்பலும் அலரும் அஞ்சிப் போக்குடன்பட்டது.

“ஆனா தலைக்கு மறனில் அன்னை
தானே யிருக்க தன்மனை.”                  (குறுந்.262)

இஃது, இடையூறு பொருளின்கட் போக்குடன்பட்டது.

ஏனைய     முன்னர்க் காட்டியவற்றுட் காண்க. ‘ஒன்றித் தோன்றுந்
தோழி  மேன’  (தொல்.பொ.39)  என்பதனான் தோழிக்கும் இவையுரிய
வென்று    கொள்க.   உடன்போக்குக்   கருதுதலுந்   தலைவன்தான்
வரையாமல் தலைவி விரும்புதலும் வழுவாய் அமைந்தன.         (31)

கற்பினுள் தோழிக்கும் அறிவர்க்குமுரிய
வழு அமைதி இவையெனல்

226. வருத்த மிகுதி சுட்டுங் காலை
உரித்தென மொழிப வாழ்க்கையுள் இரக்கம்.

இது,   கற்புக்காலத்துத்  தோழிக்கும்  அறிவர்க்கும்   உரியதொரு
வழுவமைக்கின்றது.

(இ-ள்.)     வருத்தமிகுதி   சுட்டுங்காலை - தோழியும் அறிவரும்
பரத்தையிற்   பிரிவான்   தலைவர்க்குந்  தலைவியர்க்குந்  தோன்றிய
வருத்த   மிகுதியைத்   தீர்க்கக்  கருதிக்  கூற்று  நிகழ்த்துங்காலத்து;
வாழ்க்கையுள்  இரக்கம்  உரித்தென மொழிப - அவரது இல்வாழ்க்கை
நிகழ்ச்சிக்   கண்ணே   தமக்கு   வருத்தந்தோன்றிற்றாகக்  கூறுதலும்
உரித்தென்று கூறுவராசிரியர் எ-று.

“நீர்நீ டாடிற் கண்ணுஞ் சிவக்கும்
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்குந்
தணந்தனை ஆயினெம் இல்லுய்த்துக் கொடுமோ
அந்தண் பொய்கை யெந்தை யெம்