|
யதூஉந் தலைவியுணர்ந்தாள் அப்பாராட்டினானென் றுணர்க.
அன்பானன்றிப் பொருள் காரணத்தாாற் பாராட்டினமையானும் அதனைச் செவ்வனங்கொள்ளாது பிறழக் கோடலானும் இருவர்க்கும் வழுவாமென்றமைத்தார்.
(38)
தலைவி பரத்தையைப் புகழினும் உள்ளத்தூடல் உண்டெனல்
233. கற்புவழிப் பட்டவள் பரத்தை ஏத்தினும்
உள்ளத் தூடலுண்டென மொழிப.
இது, தலைவிக்கட் டோன்றியதொரு வழுவமைக்கின்றது.
(இ-ள்.)
கற்புவழிப்பட்டவள் - கற்பின் வழிநின்ற தலைவி; பரத்தை ஏத்தினும் - பரத்தையைப் புகழ்ந்து கூறினாளாயினும்; உள்ளத்து ஊடல் உண்டென மொழிப - உள்ளத்துள்ளே ஊடின தன்மை உண்டென்று கூறுவர் புலவர் எ-று.
பரத்தையை ஏத்தவே தலைவன்கட் காதலின்மைகாட்டி வழுவாயிற்றேனும் உள்ளத்தூடலுண்மையின் அமைக்க வென்றார்.
“நாணி நின்றோள் நிலைகண் டியானும்
பேணினென் அல்லனோ மகிழ்ந வானத்
தணங்கருங் கடவுளன் னோள்நின்
மகன்தா யாதல் புரைவதாங் கெனவே.”
(அகம்.16)
என வரும்.
‘ஏத்தினும்’ என்ற உம்மையான் ஏத்தாமற்
கூறும்பொழு தெல்லாம் மாறுபடக் கூறலுளதென்பது பெற்றாம்.
“என்னொடு புரையுந ளல்லள்
தன்னொடு புரையுநர்த் தானறி யுநளே.”
(பதிற்றுப்.)
என வரும்.
(39)
கிழவன்குறிப்பை அறியக் கிழவி பிறள்குணத்தைப்
புகழ்தலுமுரியள் எனல்
234. கிழவோள் பிறள்குணம் இவையெனக் கூறிக்
கிழவோன் குறிப்பினை யுணர்தற்கும் உரியள்.
இஃது, எய்தியது ஒருமருங்கு மறுக்கின்றது; உள்ளத்தூட லின்றியும் பிறளொருத்தியைத் தலைவி புகழுமென்றலின்.
(இ-ள்.)
கிழவோள் பிறள் குணம் இவையெனக் கூறி - தலைவி வேறொரு தலைவியுடைய குணங்கள் இத்தன்மையவென்று தலைவற்குக் கூறி; கிழவோன் குறிப்பினை அறிதற்கும் உரியள் - அவள்மாட்டு இவன் எத்தன்மையனா யிருக்கின்றானென்று தலைவன் குறிப்பினை உணர்தற்குமுரியள் எ-று.
பரத்தை யென்னாது ‘பிறள்’ என்றதனான் தலைவியே யாயிற்று; அன்றிப் பரத்தையாயின் ஊடலின்மை அறனன் றாகலின் உள்ளத்தூடல் நிகழ்தல் வேண்டும். தோழி கூறுங்கால் தலை
|