நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2753
Zoom In NormalZoom Out


 

வியரைக்  கூறப்பெறா  ளென்பதூஉம் பரத்தையரைக் கூறின் அவர்க்கு
முதுக்குறைமை கூறிக் கூறுவளென்பதூஉங் கொள்க.

“கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே
ஒள்ளிழை உயர்மணல் வீழ்ந்தென
வெள்ளாங் குருகை வினவு வோளே.”        (ஐங்குறு.122)

இது,     தலைவன்   வரையக்   கருதினாளொரு     தலைவியை
இனையளெனக்   கூறி   அவள்மாட்டு  இவன்   எத்தன்மையனென்று
விதுப்புற்றுக்  கூறியது. இது தலைவன் கூற உணராது தான் வேறொன்று
கூறி  அவன்  குறிப்பு  அறியக்  கருதுதலின்  வழுவாயமைந்தது. இது
கைக்கிளைப் பொருட்கண் வழுவமைக்கின்றது.                  (40)

தலைவி மலிதலு மூடலுமல்லாதவிடத்துத்
தலைவன்முன் கழற்றுரை கூறாள் எனல்

235. தம்முறு விழுமம் பத்தையர் கூறினும்
மெய்ம்மை யாக அவர்வயி னுணர்ந்து
தலைத்தாட் கழறல்தம் எதிர்ப்பொழு தின்றே
மலிதலும் ஊடலும் அவையலங் கடையே.

இது,  பரத்தையர்க்குந்  தலைவிக்குந்  தலைவற்கும்   படுவதொரு
வழுவமைக்கின்றது.

(இ-ள்.) தம்முறு விழுமம் பரத்தையர் கூறினும்- தலைவனான் தாம்
உற்ற     வருத்தத்தைத்    தலைவிக்குப்    பரத்தையர்    கூறினும்
ஏனைத்தலைவியர்  கூறினும்; அவர்வயின் மெய்ம்மையாக உணர்ந்து -
அவர்  கூறியவாற்றானே  அவ்வருத்தத்தை  அவரிடத்து உண்மையாக
உணர்ந்து;   தலைத்தாட்  கழறல்  -  தலைவன்  முன்நின்று  கழறுங்
கழற்றுரை:   தம்  எதிர்ப்பொழுது  இன்று  -  தம்மைப்  பரத்தையர்
எதிர்ப்பட்ட    பொழுதின்கண்    இல்லை;   மலிதலும்   -   அவர்
துயருறநின்றுழிக்  கவலாது  நீங்கினானென  மகிழ்தலும்;  ஊடலும்  -
அவன்  பிரிவிற்கு  இவர்  இரங்கினாரென்ற  காரணத்தான் ஊடுதலும்;
அவை அலங்கடை - அவ்விரண்டும் நிகழா விடத்து எ-று.

என்பது வெறுத்த உள்ளத்தளாமென்பது கருத்து. எனவே, மலிதலும்
ஊடலும்  நிகழுமிடத்தாயின்  தலைத்தாட்  கழறு  மென்பது பெறுதும்,
தலைத்தாள் - தகுதிபற்றிய வழக்கு.

“பொன்னெனப் பசந்தகண் போதெழில் நலஞ்செலத்
தொன்னல மிழந்தகண் துயில்பெறல் வேண்டேன்மன்
நின்னணங் குற்றவர் நீசெய்யுங் கொடுமைகள்
என்னுழை வந்துநொந் துரையாமை பெறுகற்பின்.”  (கலி.77).

இது, பரத்தையர் முன்னரின்மையின்  மலிதலும்  ஊடலும் நிகழ்ந்து
தலைத்தாட் கழறியது.

கழறாது கூறியது வந்துழிக் காண்க. தம்முறுவிழுமத்தைப் பரத்தையர்
தலைவிக்குக்    கூறுதலாற்    பரத்தையர்க்கும்,   அவர்   கூறத்தான்
எளிவந்தமையின் தலைவிக்கும், இவரிங்ஙன