|
மொழுகலின் தலைவற்கும் வழுவமைந்தது. உம்மை இறந்தது தழீஇயிற்று.
(41)
இது பெருந்திணைக்குரியதொரு வழுவமைக்கின்றது
236. பொழுது தலைவைத்த கையறு காலை
இறந்த போலக் கிளக்குங் கிளவி
மடனே வருத்தம் மருட்கை மிகுதியோடு
அவைநற் பொருட்கண் நிகழு மென்ப.
இது ‘பின்னர் நான்கும்
பெருந்திணை பெறுமே,’
(தொல்.பொ.105) என்ற
சிறப்புடைப் பெருந்திணையன்றிப்
பெருந்திணைக் குறிப்பாய்க் கந்தருவத்துட்பட்டு வழுவிவரும் ‘ஏறிய
மடற்றிறம்’ (தொல்.பொ.51) முதலிய நான்கினுள்
ஒன்றாய் முன்னர்
நிகழ்ந்த கந்தருவம் பின்னர் வழீஇ வந்த ‘தேறுத
லொழிந்த காமத்து
மிகுதிறம்’ (தொல்.பொ.51) ஆகிய பெருந்திணை வழுவமைக்கின்றது.
ஓதலுந்தூதும் ஒழிந்த பகைவயிற் பிரிவாகிய
வாளாணெதிரும்
பிரிவும் முடியுடை வேந்தர்க்கும் அவரேவலிற் பிரியும் அரசர்க்கும்
இன்றி யமையாமையின்,
அப்பிரிவிற் பிரிகின்றான் ‘வன்புறை குறித்தல்
தவிர்ச்சி யாகும்’ (தொல்.பொ.185)
என்பதனாற் கற்புப்போல நீ இவ்வாறொழுகியான் வருந்துணையும் ஆற்றியிருவென ஆற்றுவித்துப் பிரிதல் இலக்கண மன்மையின் வாளாபிரியுமன்றே; அங்ஙனம் பிரிந்துழி அவன் கூறிய கூற்றினையே கொண்டு ஆற்றுவிக்குந் தோழிக்கும் ஆற்றுவித்தலரிதாகலின், அவட்கு அன்பின்றி நீங்கினானென்று ஆற்றாமைமிக்கு ஆண்டுப் பெருந்திணைப்பகுதி நிகழுமென்றுணர்க.
(இ-ள்.) பொழுது - அந்திக்காலத்தே; கையறு காலை -‘புறஞ் செயச் சிதைதல்’
(தொல்.மெய்ப்.18) என்னுஞ் சூத்திரத்தின்
அதனினூங்
கின்று எனக் கூறிய ‘கையறவுரைத்த’லென்னும்
மெய்ப்பாடெய்திய
காலத்தே; தலைவைத்த - அந்த வாற்றாமையின்
இகந்தவாக முடிவிலே வைக்கப்பட்ட மெய்ப்பாடுகள்; மிகுதியோடு மடனே வருத்தம் மருட்கை நாற்பொருட் கண்நிகழும் - தன் வனப்புமிகுதியுடனே மடப்பமும் ஆற்றாமையும் வியப்
|