நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2760
Zoom In NormalZoom Out


 

கூறுவேமோ  கூறேமோ   என்று   ஐயமுற்றுக்  கூறுஞ்    சொல்
தலைவற்குரித்து எ-று.

உறழுங்கிளவியைப்     பொதுப்படக் கூறினார், தோழி உயர்மொழி
கூறியவழித்  தலைவி  உறழ்ந்து கூறலுந், தலைவன் உயர்மொழி கூறிய
வழித்  தோழி  உறழ்ந்து  கூறலுந்,  தலைவன் உயர்மொழி கூறியவழித்
தலைவி  உறழ்ந்து  கூறலுந்,  தலைவி  உயர்மொழி கூறியவழித் தோழி
உறழ்ந்து கூறலுங் கோடற்கு.

“சுணங்கணி வனமுலை”                      (கலி.60)

என்னுங் குறிஞ்சிக் கலியுள்,

“என்செய்தான் கொல்லோ இஃதொத்தன் தன்கண்
பொருகளிறு அன்ன தகைசாம்பி யுள்ளுள்
உருகுவான் போலும் உடைத்து”

எனத் தோழி கூறியவழித்,

“தெருவின்கட், காரணமின்றிக் கலங்குவார்க் கண்டு....எவன்”

எனவும்,

“அலர்முலை யாயிழை நல்லாய் கதுமெனப்
பேரம ருண்கணின் தோழி உறீஇய
ஆரஞர் எவ்வ முயிர்வாங்கும்
மற்றிந்நோய் தீரு மருந்தருளாய் ஒண்டொடீ;
நின்முகங் காணும் மருந்தினேன் என்னுமால்
நின்முகந் தான்பெறின் அல்லது கொன்னே
மருந்து பிறிதியாது மில்லேன் திருந்திழாய்
என்செய்வாங் கொல்லினி நாம்;
பொன்செய்வாம்”                           (கலி.60)

எனவுந் தலைவி உறழ்ந்து கூறியவாறு காண்க.

இது தலைவன் வருத்தங்கூற அதனை ஏற்றுக்கொள்ளாது உறழ்தலின்
வழுவாய் நாண்மிகுதியாற் கடிதின் உடம்படாமையின் அமைந்தது.

“எல்லாவிஃதொத்தன்” (கலி.61) என்னுங் குறிஞ்சிக் கலியுள்,

“ஈத லிரந்தர்க்கொன் றாற்றாது வாழ்தலிற்
சாதலுங் கூடுமா மற்று”                       (கலி.61)

எனத் தலைவன் கூறியவழி,

“இவடந்தை, காதலின் யார்க்குங் கொடுக்கும் விழுப்பொருள்
யாதுநீ வேண்டி யது;”                        (கலி.61)

எனவும்,

“மண்மடர் அட்ட களிறன்னான் தன்னையொரு
பெண்டிர் அருளக் கிடந்த தெவன்கொலோ”      (கலி.61)

எனவும் தோழி யுறழ்ந்து கூறியவாறு காண்க.

இதுவும்     அவன் வருத்தத்திற்கு எதிர்கூறத்தகாதன கூறலின்
வழுவாய்த் தலைவி கருத்தறிந்து உடம்பட வேண்டுமென்று கருதுதலின்
அமைந்தது.

“அணிமுகம் மதியேய்ப்ப அம்மதியை நனியேய்க்கும்
மணிமுக மாமழைநின் பின்னொப்பப் பின்னின்கண்
விரிநுண்ணூல் சுற்றிய ஈரித ழலரி
அரவுக்கண் அணியுறழ் ஆரன்மீன் தகையொப்ப
அரும்படர் கண்டாரைச் செய்தாங் கியலும்
விரிந்தொலி கூந்தலாய் கண்டை யெமக்குப்
பெரும்பொன் படுகுவை பண்டு;
ஏஎ! எல்லா,
மொழிவது கண்டை இஃதொத்தன் தொய்யில்
எழுதி யிறுத்த பெரும்பொன் படுகம்
முழுவ துடையமோ யாம்;
உழுதாய்,
சுரும்பிமிர் பூங்கோதை அந்நல்லாய் யான்நின்
திருந்திழை மென்றோள் இழைத்தமற் றிஃதோ
கரும்பெல்லா நின்னுழவு அன்றோ ஒருங்கே
துகளறு வாண்முகம் ஒப்ப மலர்ந்த
குவளையு நின்னுழவு அன்றோ இகலி
முகைமாறு கொள்ளும் எயிற்றாய் இவையல்ல
என்னுழுவாய் நீமற் றினி;
எல்லா,
நற்றோ ளிழைத்த கரும்புக்கு நீகூறு
முற்றெழி னீல மலரென வுற்ற
விரும்பீர் வடியன்ன வுண்கட்கு மெல்லாம்
பெரும்பொன்னுண் டென்பா யினி;
நல்லா யிகுளை கேள்,
ஈங்கே தலைப்படுவ னுண்டான் தலைப்பெயின்
வேந்துகொண் டன்ன பல;
ஆங்காக வத்திற மல்லாக்கால் வேங்கைவீ
முற்றெழில் கொண்ட சுணங்கணி பூணாகம்
பொய்த்தொருகா லெம்மை முயங்கினை சென்றீமோ
முத்தேர் முறுவலாய் நீபடும் பொன்னெல்லாம்
உத்தியெறிந்து விடற்கு.”                     (கலி.64)

இது,    தலைவன் உயர்மொழிக்குத் தலைவி உறழ்ந்துகூறியது. இது
நகையாடிக்  கூட்டத்தை  விரும்பிக் கூறியமொழிக்கு உறழ்ந்து கூறலின்
வழுவாய் அவளும் நகையாடிக் கூறலின்