|
வட்கு - தோழிக்கு; உயர்மொழிக் கிளவியும் உரிய -
தலைவியையுந் தலைவனையும் உயர்த்துக் கூறுங்கூற்றும் உரியவாம் ஒரோவோரிடத்து எ-று.
“மகிழ்மிகச் சிறப்ப மயங்கினள் கொல்லோ
யாண ரூரநின் மாணிழை அரிவை
காவிரி மலிர்நிறை யன்னநின்
மார்புநனி விலக்கல் தொடங்கி யோளே.”
(ஐங்குறு.42)
இதனுட் காவிரிப் பெருக்குப்போலத் தலைவியை நோக்கி வருகின்ற மார்பினைத் தான் விலக்குமாறென்னையெனத் தலைவியை உயர்த்துக் கூறியவாறு காண்க.
“காலையெழுத்து” (குறுந்.45) என்பதும் அது.
“உலகம் புரப்பான் போல்வதோர் மதுகையும்
உடையன்”
(கலி.47)
எனவும்,
“தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்தினை
நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின்
மணங்கமழ் நாற்றத்த மலைநின்று பலிபெறூஉம்
அணங்கென வஞ்சுவர் சிறுகுடி யோரே.”
(கலி.52)
எனவுந் தலைவனை உயர்த்துக் கூறியவாறு காண்க.
(46)
தலைவியும் தோழியும் வாயில்களோடு
கூறுவனவற்றை வெளிப்படக் கிளப்பரெனல்
239. வாயிற் கிளவி வெளிப்படக்கிளத்தல்
தாவின் றுரிய தத்தங் கூற்றே.
இது, தலைவியுந் தோழியும் வாயிலாகச் சென்றாருடன் கூறுவன வற்றுட் படுவதொரு வழுவமைக்கின்றது.
(இ-ள்.) தத்தங் கூற்றே- தோழிக்குந் தலைவிக்குமுரிய
கூற்றின்கண்: வாயிற் கிளவி - வாயிலாய் வந்தார்க்கு மறுத்துத்
தலைவனது பழிகளைக் கூறுங் கிளவிகளை; வெளிப்படக் கிளத்தல் - மறையாது வெளியாம்படி கூறுதல்; தாவின்று உரிய - இங்ஙனம் கூறுகின்றேமே என்னும் வருத்தம் மனத்து நிகழ்தலின்றியே உரியவாம் எ-று.
அவை தலைவிக்குந் தோழிக்குமுரியனவும்
காமக்கிழத்திற்கு உரியனவும், தோழிக்கே யுரியனவுந் தலைவிக்கே யுரியனவுமாம். வாயில்களாவார் ஆற்றாமையுந் தோழி முதலியோருமாம்.
“நெஞ்சத்த பிறவாக நிறையில ளிவளென
வஞ்சத்தான் வந்தீங்கு வலியலைத் தீவாயோ.”
(கலி.69)
இஃது, ஆற்றா
|