நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2764
Zoom In NormalZoom Out


 

முகந்த பல்கிளைக் கொண்மூ
இருண்டுயர் விசும்பின் வலனேர்பு வளைஇப்
போர்ப்புறு முரசின் இரங்கி முறைபுரிந்
தறநெறி பிழையாத் திறனறி மன்னர்
அருஞ்சமத் தெரிர்ந்த பெருஞ்செய் ஆடவர்
கழித்தெறி வாளின் அழிப்பன விளங்கும்
மின்னுடைக் கருவியை ஆகி நாளுங்
கொன்னே செய்தியோ அரவம் பொன்னென
மலர்ந்த வேங்கை மலிதொடர் அடைச்சிப்
பொலிந்த ஆயமொடு காண்டக இயலித்
தழலை வாங்கியுந் தட்டை யோப்பியும்
அழலேர் செயலை யந்தளிர் தஇயுங்
குறமகள் காக்கு மேனற்
புறமுந் தருதியோ வாழிய மழையே.”         (அகம்.188)

இதனுட்     கொன்னே செய்தியோ  அரவமென்பதனாற் பயனின்றி
அலர்விளைத்தியோவெனவுங்     கூறி     ஏனற்புறமுந்    தருதியோ
என்பதனான்  வரைந்து  கொள்வையோ  வெனவுங் கூறித் தலைவனை
மழைமேல்  வைத்துக்  கூறலிற்  சுட்டாயிற்று.  கொன்னே  செய்தியோ
என்றதனான்  வழுவாயினும்  வரைதல்   வேட்கையாற்  கூறினமையின்
அமைந்தது.

‘அன்புறு தகுந’ (தொல்.பொ.231)   என்பதனுள்   ஏனையதற்கு
உதாரணங் காட்டினாம்.

“விளையா டாயமொடு பிறவுமா ருளவே.”        (நற்.172)

இதனுட்     புன்னையை  அன்னை    நுவ்வையாகுமென்றதனான்
இவளெதிர்    நும்மை    நகையாடுத    லஞ்சுதுமென   நகையாடிப்
பகற்குறியெதிரே   கொள்ளாமைக்   குறிப்பினான்   மறைத்துக்  கூறி
மறுத்தவாறு காண்க. இதனைச் செவ்வனங் கூறாமையின் அமைத்தார்.

‘உள்ளுறை  யுவம மேனை யுவமம்’ (தொல்.பொ.46)  என்னுஞ்
சூத்திரத்து “விரிகதிர் மண்டிலம்”  (கலி.71)  என்னும் மருதக்கலியுட்
சிறப்புக் கொடுத்து நின்றது காட்டினாம்.

அறத்தொடு நிலையும் பொழுதும் ஆறும் முதலியனவுஞ் செவ்வனங்
கூறப்படுதலின்  இவை   கரந்தே  கூறப்படுதலிற்  ‘கெடலரு  மரபின்’
என்றார். இவை தோழிக்குந் தலைவிக்கும் உரியவாறு செய்யுட்