|
வழுவாயமைந்தது.
“வையினர் நலனுண்டார் வாராமை நினைத்தலின்”
(கலி.134)
என்பது வஞ்சித்தமை கூறிற்று.
“இதுவுமோ - ரூராண்மைக் கொத்த படிறுடைத்து” (கலி.89)
என்பது ஆண்மையிலே பழியுண்டு என்றது. இதுவும் வழீஇ அமைந்தது.
(50)
சினம் முதலியன ஒருபொருளைச் சிறப்பித்துவருமாயின்
அமைக்கப்படுமெனல்
245. சினனே பேதைமை நிம்பிரி நல்குரவு
அனைநால் வகையுஞ் சிறப்பொடு வருமே.
இது, மெய்ப்பாட்டியலுள் ஆகாதென்பவற்றுட் சில அமைகவென வழுவமைக்கின்றது. இது பொதுவாகக் கூறலின் தலைவிக்குந் தோழிக்குங் கொள்க.
(இ-ள்.) சினனே - கோபம் நீடித்தலும்; பேதைமை - ஏழைமையும்; நிம்பிரி
- பொறாமை தோன்றுங் குறிப்பும்; நல்குரவு - செல்வமின்மையும்;
அனைநால்வகையும்
- என்ற
அத்தன்மையனவாகிய நாற்கூறும்; சிறப்பொடு வருமே - ஒரு
பொருளைச் சிறப்பித்துக் கூறுதல் காரணத்தான் வரும் எ-று.
சினத்தை ஆண்டுக் கொடுமையினடக்கினார்.
“நாணு நிறையும் நயப்பில் பிறப்பிலி”
(கலி.60)
எனவும்,
“தொடிய வெமக்குநீ யாரை”
(கலி.88)
எனவுஞ் சினம்பற்றிவரினும் அவை தன்காதலைச் சிறப்பித்தலின் அமைந்தன.
“செவ்விய தீவிய சொல்லி யவற்றொடு
பைய முயங்கிய வஞ்ஞான் றவையெல்லாம்
பொய்யாதல் யான்யாங் கறிகோமற் றைய
அகனகர் கொள்ளா அலர்தலைத் தந்து
பகன்முனி வெஞ்சுரம் உள்ளல் அறிந்தேன்
மகனல்லை மன்ற இனி”
(கலி.19)
எனக் கழிபெருங் காதலான் நின்னை உள்ளவாறறிந்திலே னெனத்
தன் பேதைமையைக் காதலாற் சிறப்பித்தலின் அமைந்தது.
“உறலியா மொளிவாட வுயர்ந்தவன் விழவினுள்
விறலிழை யவரொடு விளையாடு வான்மன்னோ
பெறலரும் பொழுதொடு பிறங்கிணர்த் துருத்திசூழ்ந்
தறல்வாரும் வையையென் றறையுந ருளராயின்.” (கலி.39)
இது நிம்பிரி; அவரோடும் விளையாடுவானெனப் பொறாமை கூறியும் அவன் ஈண்டையானாக வேண்டுமெனக்
காதலைச் சிறப்பித்தலின் அமைந்தது.
“பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால்
விரிகதிர்ப் பொற்கலத் தொருகை யேந்திப்
புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
உண்ணென் றோக்குபு புடைப்பத் தெண்ணீர்
முத்தரிப் பொற்சிலம் பொலி
|