என்பது சூத்திரம். நிறுத்த
முறையானே பொருளினது இலக்கணம் உணர்த்தினமையின் இது
பொருளதிகாரமென்னும் பெயர்த்தாயிற்று. இது நாண்மீனின் யெர் நாளிற்குப் பெயராயினாற்போல்வதோர் ஆகுபெயர். பொருளாவன:- அறம் பொருளின்பமும், அவற்றது நிலையின்மையும், அவற்றினீங்கிய வீடுபேறுமாம். பொருளெனப் பொதுப்படக் கூறவே, அவற்றின் பகுதியாகிய முதல் கரு உரியும், காட்சிப் பொருளும், கருத்துப் பொருளும், அவற்றின் பகுதியாகிய ஐம்பெரும்
பூதமும், அவற்றின் பகுதியாகிய இயங்குதிணையும் நிலைத்திணையும், பிறவும் பொருளாம். எழுத்துஞ் சொல்லும்
உணர்த்தி அச்சொற்றொடர் கருவியாக உணரும் பொருள்
உணர்த்தலின்,
மேலதிகாரத்தோடு இயைபுடைத்தாயிற்று. அகத்திணைக்கண்
இன்பமும், புறதிதிணைக்கண் ஒழிந்த மூன்று பொருளும் உணர்த்துப. இது வழக்கு நூலாதலிற் பெரும் பான்மையும் நால்வகை வருணத்தார்க்கும் உரிய இல்லறம் உணர்த்திப் பின் துறவறமுஞ் சிறுபான்மை கூறுப. அப்பொருள்கள் இவ்வதிகாரத்துட் காண்க. பிரிதனிமித்தங் கூறவே,
இன்ப நிலையின்மையுங் கூறிக் ‘காமஞ் சான்ற’ என்னுங் கற்பியற் சூத்திரத்தான் துறவறமும் கூறினார். வெட்சி முதலா வாகையீறாக அறனும் பொருளும் பயக்கும் அரசியல் கூறி, அவற்றது நிலையின்மை காஞ்சியுட் கூறவே, அறனும் பொருளும் அவற்றது
நிலையின்மையுங் கூறினார். ‘அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்.’ என்னுஞ் சூத்திரத்தான்
|