நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3158
Zoom In NormalZoom Out


புறங்கை     நான்காகாது    இரண்டாயவாறு   போல,  அகத்திணை
யேழற்குப்   புறத்திணையேழென்றலே   பொருத்த   முடைத்தாயிற்று.
ஆகவே,   அகத்திணைக்குப்   புறத்திணை  அவ்வந்நிலத்து  மக்கள்
வகையாற்   பிறந்த   செய்கை  வேற்றுமையாதலின்  ஒன்றொன்றற்கு
இன்றியமையாதவாறாயிற்று.   கரந்தை  அவ்வேழற்கும்  பொதுவாகிய
வழுவாதலின்,    வேறு   திணையாகாது.   எண்வகை   மணத்தினும்
எதிர்சென்று    கூறுவதாகலானுங்,   காமஞ்சாலா   விளமைப்பருவம்
அதன்கண்ணதாகலானுங் கைக்கிளையை முற்கூறினார். என்ப வென்றது
அகத்தியனாரை.  இக்  குறியீடுகளும் அகத்தியனாரிட்ட வென்றுணர்க.
                                                       (1)

எழுவகைத் திணையுள் தமக்கென
நிலம்பெறுவனவும் பெறாதனவும்
 

2.அவற்றுள்,
நடுவண் ஐந்திணை நடுவண தொழியப்
படுதிரை வையம் பாத்திய பண்பே.
 

இது முற்கூறிய ஏழனுள்  தமக்கென  நிலம்  பெறுவனவும்,  நிலம்
பெறாதனவுங் கூறுகின்றது.

(இ-ள்) அவற்றுள்-முற்கூறிய ஏழு திணையுள்; நடுவண் ஐந்திணை
-  கைக்கிளை பெருந்திணைக்கு நடுவுநின்ற ஐந்தொழுக்கத்தினை; படு
திரை  வையம்  பாத்திய பண்பே - ஒலிக்குங் திரைசூழ்ந்த உலகிற்கு
ஆசிரியன்   பகுத்துக்கொடுத்த   இலக்கணத்தை;   நடுவணது ஒழிய
-நடுவணதாகிய  பாலையை  அவ்வுலகம்  பெறாதே நிற்கும் படியாகச்
செய்தார் எ-று.

எனவே, யானும் அவ்வாறே நூல் செய்வ லென்றார்.

உலகத்தைப் படைக்கின்ற   காலத்துக்   காடும் மலையும்  நாடுங்
கடற்கரையுமாகப் படைத்து, இந்நால்வ