றப்படாதென்பதூஉம்
பெறுதும், ‘நல்லுலகத்து, வழக்குஞ் செய்யுளு மாயிரு
முதலின்’ (தொல். பாயிரம்) என்று புகுந்தமையிற் பொருளும் அவ்விரண்டனானும் ஆராய்தல் வேண்டுதலின். இஃது இல்லதெனப்படாது,
உலகியலேயாம். உலகியலின்றேல், ஆகாயப்பூ நாறிற்றென்றுழி அது சூடக் கருதுவாருமின்றி மயங்கக் கூறினானென்று உலகம் இழித்திடப்படுதலின் இதுவும் இழித்திடப்படும். இச்செய்யுள் வழக்கினை நாடக வழக்கென மேற்கூறினார், எவ்விடத்தும் எக்காலத்தும் ஒப்ப நிகழும் உலகியல் போலாது, உள்ளோன் தலைவனாக இல்லது புணர்த்தல் முதலாகப் புனைந்துரை வகையான் கூறும் நாடகஇலக்கணம் போல யாதானுமொரோவழி ஒரு சாரார்மாட்டு உலகியலான் நிகழும் ஒழுக்கத்தினை
எல்லார்க்கும் பொதுவாக்கி இடமுங் காலமும் நியமித்துச் செய்யுட் செய்த ஒப்புமை நோக்கி. மற்று இல்லோன் தலைவனாக
இல்லது புணர்க்கும் நாடக வழக்குப்போல் ஈண்டுக் கொள்ளாமை
‘நாடக வழக்கு’ என்னுஞ் சூத்திரத்துட் (53) கூறுதும். ‘‘கணங்கொ ளருவிக் கான்கெழு நாடன் குறும்பொறை நாட னல்வய லூரன் தண்கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டை
|