நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3163
Zoom In NormalZoom Out


ளைதரு பூட்டி வேண்டுகுள கருத்த
வாணிற வுருவின் ஒளிறுபு மின்னிப்
பரூஉவுறைப் பஃறுளி சிதறிவான் நவின்று
பெருவரை நளிர்சிமை அதிர வட்டித்துப்
புயலே றுரைஇய வியலிருள் நடுநாள்
விறலிழைப் பொலிந்த காண்பின் சாயற்
றடைஇத் திரண்டநின் றோள்சேர் பல்லதைப்
படாஅ வாகுமெங் கண்ணென நீயும்
இருள்மயங் கியாமத் தியவுக்கெட விலங்கி
வரிவயங் கிரும்புலி வழங்குநர்ப் பார்க்கும்
பெருமலை விடரகம் வரவரி தென்னாய்
வரவெளி தாக வெண்ணுதி யதனான்
நுண்ணிதிற் கூட்டிய பன்மா ணாரந்
தண்ணிது கமழு நின்மார் பொருநாள்
அடைய முயங்கே மாயின் யாமும்
விறலிழை நெகிழச் சாஅய்தும் அதுவே
அன்னை யறியினு மறிக அலர்வாய்
அம்பன் மூதூர் கேட்பினுங் கேட்க
வண்டிறை கொண்ட வெரிமருள் தோன்றியொடு
ஒண்பூ வேங்கை கமழுந்
தண்பெருஞ் சாரற் பகல்வந் தீமே.‘‘        
(அகம்.218)

இஃது     இடத்துய்த்துப்   பகற்குறி   நேர்ந்த   வாய்பாட்டான்
வரைவுகடாயது.   இம்  மணிமிடைபவளத்துட்,  குறிஞ்சிக்கு  முதலுங்
கருவும் வந்து உரிப்பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது.

‘‘வண்டுபடத் ததைந்த கண்ணி ஒண்கழல்
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற்போர் நெடுவே ளா