இன்றுயின் மார்பின் சென்றஎன் நெஞ்சே.’’
(அகம்.40) இது பொருட் பிரிவிடைத் தோழிக்கு
உரைத்தது. இக்களிற்றி யானைநிரையுள், நெய்தற்கு முதலுங் கருவும் வந்து உரிப் பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது. இச்சிறப்பானே, முதலின்றிக் கருவும் உரிப்பொருளும் பெறுவனவும், முதலுங் கருவுமின்றி உரிப்பொருளே பெறுவனவுங் கொள்க. ‘‘திருநகர் விளங்கு மாசில் கற்பி னரிமதர் மழைக்கண் மாஅ யோளொடு நின்னுடைக் கேண்மை யெவனோ முல்லை யிரும்பல் கூந்த னாற்றமும் முருந்தேர் வெண்ப லொளியநீ பெறவே.’’ இது
பொருள்வயிற் பரிந்தோன் சுரத்து நினைந்து உரைத்தது. இது முதற்பொருளின்றி வந்த முல்லை. ‘‘கரந்தை விரைஇய தண்ணறுங் கண்ணி யிளைய ரேவ வியங்குபரி கடைஇப் பகைமுனை வலிக்குங் தேரொடு வினைமுடித் தனர்நங் காத லோரே.’’ இது வந்தாரென் றாற்றுவித்தது. இது முதலுங் கருவு மின்றி வந்த முல்லை. ‘‘நறைபரந்த சாந்த மறவெறிந்து நாளா லுறையெதிர்ந்து வித்தியவூ ழேனற் - பிறையெதிர்ந்த தாமரை போன்முகத்துத் தாழ்குழலீர் காணீரோ வேமரை போந்தன வீண்டு.’’
(திணைமாலை.1) இது மதியும்படுத்தது, இது முதற்பொருளின்றி வந்த குறிஞ்சி. |