நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3167
Zoom In NormalZoom Out


‘‘முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே
மலைய னொள்வேற் கண்ணி
முலையும் வாரா முதுக்குறைந் தனளே.’’

இஃது  இளையள்  விளைவிலள் என்றது. முதலுங் கருவு மின்றி வந்த
குறிஞ்சி. இது நாணநாட்டம்

‘‘நாளு நாளு மாள்வினை யழுங்க
வில்லிருந்து மகிழ்வோருக் கில்லையாற் புகழென
வொண்பொருட் ககல்வர்நங் காதலர்
கண்பனி துடையினித் தோழி நீயே’’
      (சிற்றெட்டகம்)

இது   வற்புறுத்தாற்றியது.   இஃது   உரிப்பொருளொன்றுமே   வந்த
பாலை.

‘‘பூங்கொடி மருங்கி னெங்கை கேண்மை
முன்னும் பின்னு மாகி
யின்னும் பாண னெம்வயி னானே.’’

இது   வாயின்   மறுத்தது.   இஃது   உரிப்பொருளொன்றுமே  வந்த
மருதம்.

‘‘அங்கண் மதிய மரவின்வாய்ப் பட்டெனப்
பூசூல் வாயாப் புலம்புமனைக் கலங்கி
யேதின் மாக்களு நோவர் தோழி
யொன்று நோவா ரில்லைத்
தெண்கடற் சேர்ப்ப னுண்டவென் னலக்கே.’’

இது    கழிபடர்    கிளவி.   இது   பேரானும்   உரிப்பொருளானும்
நெய்தலாயிற்று.

இங்ஙனம்  கூறவே, உரிப்பொருளின்றேற் பொருட்பயனின்றென்பது
பெற்றாம்.  இதனானே  முதல்  கரு வுரிப்பொருள் கொண்டே வருவது
திணையாயிற்று.  இவை பாடலுட் பயின்ற வழக்கே இலக்கண மாதலின்
இயற்கையாம். அல்லாத சிறுபான்மை வ