நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3168
Zoom In NormalZoom Out


ழக்கினைச் செயற்கையென மேற்பகுப்பர்.

முதல் இன்னது எண்பதும் அதன் பகுப்பும்
 

4.

முதலெனப் படுவத நிலம்பொழு திரண்டன்
இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே.
 

இது  நிறுத்தமுறையானே முதல் உணர்த்துவான் அதன்  பகுதியும்
அவற்றுட் சிறப்புடையனவும் கூறுகின்றது.

(இ-ள்)  முதல் எனப்படுவது-முதலெனச் சிறப்பித்துக் கூறப்படுவது;
நிலம் பொழுது இரண்டன் இயல்பு என மொழிப - நிலனும் பொழுதும்
என்னும்  இரண்டனது இயற்கை நிலனும் இயற்கைப் பொழுதும் என்று
கூறுப:  இயல்புணர்ந்தோரே  - இடமும் காலமும் இயல்பாக உணர்ந்த
ஆசிரியர் எ-று.

‘இயற்கை’ யெனவே, செயற்கை  நிலனுங்  செயற்கைப்  பொழுதும்
உளவாயின. மேற் ‘பாத்திய’ (2) நான்கு நிலனும் இயற்கை நிலனாம்.

ஐந்திணைக்கு   வகுத்த பொழுதெல்லாம் இயற்கையாம்; செயற்கை
நிலனும் பொழுதும் முன்னர் அறியப்படும்.

‘முதல் இயற்கைய’ வென்றதனாற் கருப்பொருளும் உரிப்பொருளும்
இயற்கையுஞ்     செயற்கையுமாகிய    சிறப்புஞ்    சிறப்பின்மையும்
உடையவாய்ச் சிறுவரவின  வென  மயக்கவகையாற் கூறுமாறு மேலே
கொள்க.  இனி நிலத்தொடு காலத்தினையும் ‘முதல்’ என்றலின், காலம்
பெற்று நிலம்  பெறாத பாலைக்கும் அக்காலமே முதலாக அக்காலத்து
நிகழும் கருப்பொருளும் கொள்க. அது முன்னர்க் காட்டிய உதார