நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3172
Zoom In NormalZoom Out


க்குங்கால்       அங்கி      ஆதித்தன்கட்      கொடுக்குமென்பது
வேதமுடிபாகலின்,  ஆதித்தன்  எல்லா  நிலத்திற்கும்  பொது  வென
மறுக்க.   இவ்வாசிரியர்   கருப்பொருளாகிய  தெய்வத்திணை  முதற்
பொருளொடு  கூட்டிக்  கூறியது தெய்வழிபாட்டு மரபிதுவே, ஒழிந்தது
மரபன்றென்றற்கு.    எனவே,    அவ்வந்நிலத்தின்    தெய்வங்களே
பாலைக்குந் தெய்வமாயின.

‘உறையுலகென்றார்,  ஆவும் எருமையும் யாடும் இன்புறு மாற்றான்
நிலைபெறும்   அக்காட்டின்   கடவுளென்றற்கு.  ‘மைவரை’  எனவே
மழைவளந்  தருவிக்கும் முருகவேளென்றார். இந்திரன் யாற்றுவளனும்
மழைவளனுந் தருமென்றற்குத் ‘தீம்புன’ லென்றார். திரைபொருது கரை
கரையாமல்  எக்கர்  செய்தல்  கடவுட்  கருத்தென்றற்குப் ‘பெருமண’
லென்றார்.

இனி,  முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்ற முறை யென்னை?
யெனின்,  இவ்வொழுக்கமெல்லாம்  இல்லறம் பற்றிய ஒழுக்கமாதலின்,
கற்பொடு  பொருந்திக் கணவன் சொற்பிழையாது இல்லிருந்து நல்லறஞ்
செய்தல்  மகளிரது  இயற்கை முல்லையாதலின் அது முற்கூறப்பட்டது.
எனவே, முல்லையென்ற சொற்குப் பொருள் இருத்தலாயிற்று, ‘‘முல்லை
சான்ற முல்லையம் புறவின்’’ என்பவா