நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3174
Zoom In NormalZoom Out


டைத்    தெனப்பட்ட    பாலைக்குத்   தெய்வத்தை   விலக்குதற்கு
மென்றுணர்க.

உ-ம்:

‘‘வன்புலக் காட்டுநாட் டதுவே’’              (நற். 59)

எனவும்,

‘‘இறும்புபட் டிருளிய விட்டருஞ் சிலம்பிற்...
கன்மிசைச் சிறுநெறி’’
                   (அகம்.128)

எனவும்,

‘‘அவ்வய னண்ணிய வளங்கே ழூரன்’’       (அகம்.26)

எனவும்,

‘‘கானலுங் கழறாது மொழியாது’’            (அகம்.170)

எனவும்     நால்வகை    யொழுக்கத்திற்கு    நால்வகை  நிலனும்
உரியவாயினவாறு காண்க.                                 (5)

முல்லைக்குங் குறிஞ்சிக்கும் உரி
பெரும்பொழுதும் சிறுபொழுதும்
 

6. காரும் மாலையும் முல்லை குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்.
 

இது முதலிரண்டனுள் நிலங் கூறிக் காலங்கூறுவான்  முல்லைக்குங்
குறிஞ்சிக்கும்   பெரும்பொழுதுஞ்  சிறுபொழுதுங்  கூறுத  னுதலிற்று.
தொ. பொ. நச்.(1)7

(இ-ள்)   காரும்  மாலையும்  முல்லை  -   பெரும்பொழுதினுட்
கார்காலமுஞ்     சிறுபொழுதினுள்     அக்காலத்து     மாலையும்
முல்லையெனப்படும்;  குறிஞ்சி  கூதிர்  யாமம்  என்மனார் புலவர் -
பெரும்   பொழுதினுட்   கூதிர்காலுமுஞ்   சிறுபொழுதினுள்  அதன்
இடையாமமுங் குறிஞ்சி யெனப்படும் எ-று.

முதல்  கரு   உரிப்பொருளென்னும்  மூன்று பாலுங்கொண்டு ஒரு
திணையாமென்று  கூறினாரேனும்,  ஒரு  பாலினையுந்  திணையென்று
அப்பெயரானே    கூறினார்,    வந்தான்    என்பது    உயர்திணை
என்றாற்போல. இது மேலனவற்றிற்கும் ஒக்கும். இக்காலங்கட்கு வி