நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3179
Zoom In NormalZoom Out


க்கு உரித்தென்று கூறுவர் ஆசிரியர் எ-று.

எதிர்தலென்பது   முன்னாதல்;  எனவே,  முன்பனியாயிற்று,  அது
ஞாயிறுபட்ட அந்திக்கண் வருதலின்.  உரித்தென்றதனாற் கூதிர் பெற்ற
யாமமும் முன்பனி பெற்று வரும் எனக் கொள்க.

உ-ம்:

பனியடூஉ நின்ற பானாட் கங்குல்
தமியோர் மதுகை தூக்காய் தண்ணென
முனிய அலைத்தி முரணில் காலை          
(அகம்.125)


என முன்பனியாமங் குறிஞ்சிக்கண் வந்தது.

மருதத்திற்குரிய சிறுபொழுதும் நெய்தற்குரிய சிறுபொழுதும்
 

7. வைகுறு விடியன் மருதம் எற்பாடு
நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும்.
 

இனிச் சிறுபொழுதே பெறுவன கூறுகின்றது.

(இ-ள்) வைகுறு விடியல் மருதம் - வைகறையும் விடியற் காலமும்
மருதமாதலும்; எற்பாடு  நெய்தல்  ஆதல்  மெய்பெறத் தோன்றும் -
எற்படுகாலம் நெய்தலாதலும் பொருள் பெறத் தோன்றும் எ-று.

வைகுறுதலும்     விடியலும்  என்னும்  உம்மை தொக்கு நின்றது.
செவியறிவுறுத்தலைச்  செவியறிவுறூஉ  என்றாற்  போல வைகுறுதலை
வைகுறு  என்றார். அது மாலையாமமும்  இடையாமமுங் கழியுந்துணை
அக்கங்குல்  வைகுறுதல்.  அது  கங்குல்  வைகிய அறுதியாதனோக்கி
வைகறை  யெனவுங்  கூறுப. அதுவும் பாடம். நாள் வெயிற் காலையை
விடியலென்றார்.  ‘‘விடியல்  வெங்கதிர்  காயும் வேயம லகலறை’’
(கலி.45) என்ப. ‘விடியல்  வைகறை யிடூஉ மூர’ (அகம்.196) என்றது,
விடிய