னாற் பெறுதும். இவற்றிற்கு
அறுவகை இருதுவும் உரிய வென்பதன்றிக் காரும் இளவேனிலும் வேனிலும் பெரும்பொழுதாகக் கொள்ப என்றற்குப் பொருள் பெறத் தோன்றும்’ என்றார். இனி நெய்தற்கு ஒழிந்த மூன்று காலமும் பற்றிவரச் சான்றோர் செய்யுட் செய்திலர், அக்காலத்துத் தலைவி புறம் போந்து விளையாடாமையின். அங்ஙனம் வந்த செய்யுளுளவேல் அவற்றையுங் கொள்க. ‘‘கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம் பழன வாளை கதூஉம் ஊரன் எம்மில் பெருமொழி கூறித் தம்மில் கையுந் காலுந் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே.’’
(குறுந்.8) இது குறுந்தொகை புறனுரைத்தாளெனக் கேட்ட
பரத்தை தலைவனை நெருங்கித் தலைவன் பாங்காயினார் கேட்ப உரைத்தது. இது முதுவேனில் வந்தது. ‘‘அரிபெய் சிலம்பி னாம்பலந் தொடலை அரம்போ ழவ்வளைப் பொலிந்த முன்கை இழையணி பணைத்தோ ளையை தந்தை மழைவளந் தரூஉ மாவண் தித்தன் பிண்ட நெல்லின் உறந்தை யாங்கண் கழைநிலை பெறாஅக் காவிரி நீத்தங் குழைமா ணொள்ளிழை நீவெய் யோளொடு வேழ வெண்புணை தழீஇப் பூழியர் கயநா டியானையின் முகனமர்ந் தாஅங் கேந்தெழி லாகத்துப் பூந்தார் குழைய நெருந லாடினை புனலே யின்றுவந் தாக வனமுலை யரும்பிய சுணங்கின் மாசில் கற்பிற் புதல்வன் தாயென மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றியெம் முதுமை யெள்ளலஃதமைகுந் தில்ல சுடர்ப்பூந் தாமரை நீர்முதிர் பழனத் தந்தூம்பு வள்ளை யாய்கொடி மயக்கி வாளை மேய்ந்த வள்ளெயிற்று நீர்நாய் முள்ளரை |