இது
நிலனுடைய நான்கற்குங் காலங் கூறி அந்நான்கற்கும் பொதுவாகிய பாலைக்குங் காலங் கூறுகின்றது. (இ-ள்)
நடுவு நிலைத்திணையே - பாலைத்திணை; நண்பகல் வேனிலொடு - எற்பாடுங் காலையும் என்னும் இரு
கூற்றிற்கு நடுவணதாகிய ஒரு கூறு தான் கொண்டு வெம்மை செய்து பெருகிய பெரும்பகலோடும் இளவேனிலும் முதுவேனிலும் என்னும் இரண்டனோடும்; முடிவு நிலை மருங்கின் - பிரிவெனப்படுதற்கு முடிவுடைத்தாகிய குறிஞ்சியும் முல்லையுமாகிய ஒரு மருங்கின் கண்ணே; முன்னிய நெறித்து - ஆசிரியன் மனங்கொள்ளப்படும் நெறியையுடைத்து எ-று. ‘நிலை’
யென்றது நிலத்தினை. முடிவுநிலைப்பகுதிக்கண் முன்னப் படுமெனவே அத்துணை யாக்கமின்றி ஒழிந்த மருதமும் நெய்தலும் முடியாநிலமாய்
அத்துணை முன்னப்படாவாயின பாலைக் கென்பதாம். பிரிவின்
|