நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3185
Zoom In NormalZoom Out


பனிபடு துறையே.’’                     (ஐங்குறு.141)

இது  வரைவிடைவைத்துப்  பிரிந்துழி  ஆற்றுவிக்குந் தோழிக்குத்
துறை  யின்பமுடைத்தாகலான் வருத்திற்றெனத் தலைவி கூறியது. இது
சுரத்தருமை  முதலியனவின்றி  நெய்தற்குட்  பாலை வந்தது. ஏனைய
வந்துழிக் காண்க.

முந்நீர்     வழக்கஞ்   சிறுபான்மையாகலின்  நெய்தற்கு  முடிய
வாராதாயிற்று.    இக்கருத்தானே   பிரிவொழுக்கம்   மருதத்திற்கும்
நெய்தற்குஞ் சிறுபான்மையாகப் புலனெறிவழக்கஞ் செய்யப்படும்.

எற்பாட்டுக்கு     முன்னர்த்தாகிய  நண்பகலைப் பலைக்குக் கூற
வேண்டிப்  பின்  வைத்தாரேனும்  பெரும்பொழுதிற்கு முற்கூறுதலின்
ஒருவாற்றாற்  சிறுபொழுதாறும் முறையே வைத்தாராயிற்று. காலையும்
மாலையும்  நண்பகலன்ன கடுமைகூரச் சோலை தேம்பிக் கூவன் மாறி,
நீரும் நிழலும் இன்றி, நிலம் பயந் துறந்து, புள்ளும் மாவும் புலம்புற்று
இன்பமின்றித்  துன்பம்  பெருகுவதொரு  காலமாதலின், இன்பத்திற்கு
இடையூறாகிய பிரிவிற்கு நண்பகலும் வேனிலுஞ் சிறப்புடைய ஆயின.

‘‘தெள்ளறல் யாற்றுத் திரைமணல் அடைகரை
வண்டு வரிபாடத் தண்போ தலர்ந்து
தாதுந் தளிரு மேதகத் துவன்றிப்
பல்பூஞ் சோலைப் பன்மலர் நாற்றமொடு
செவ்விதிற் றென்றல் நொவ்விதிற் றாகிக்
குயில் கூஉக் குரலும் பயில்வதன் மேலும்
நிலவுஞ் சாந்தும் பயில்வுறு முத்தும்
இன்பம் விளைக்கு நன்பொருள் பிறவும்
பண்டைய போலாது, இன்பம் மிகத்தரும்’’

இளவேனிற்    காலத்துப், பொழில்    விளையாடியும்,  புதுப்பூக்
கொய்தும்,