மேற் கடுவரை நீரிற் கடுத்துவரக் கண்டும் நெடுவரை நீழ னிரை.’’
(புற. வெ. வெட்சி.11) ‘‘கல்கெழுசீறூர்க் கடைகாண் விருப்பினான் மெல்ல நடவா விரையுநிரை - யொல்லெனத் தெள்ளறற் கான்யாற்றுத் தீநீர் பருகவு மள்ளர் நடவா வகை.’’
(பெரும்பொருள்விளக்கம்.
புறத்திரட்டு.1248.நிரைமீட்சி.6) இவை
கண்டோர் கூற்று. நுவலுழித்
தோற்றம் - பாடிவீட்டுள்ளோர் மகிழ்ந்துரைத்தற்குக் காரணமான நிரைகொண்டோர்
வரவும், ஊரிலுள்ளோர் கண்டு மகிழந்துரைத்தற்குக்
காரணமான நிரைமீட்டோர் வரவும்; உ-ம்: ‘‘மொய்யண லானிரை முன்செல்லப் பின்செல்லு மையணற் காளை மகிழ்துடி - கையணல் வைத்த வெயிற்றியர் வாட்க ணிடனாட வுய்த்தன் றுவகை யொருங்கு.’’
(புறம். வெ. வெட்சி.12) ‘‘காட்டகஞ் சென்றுயிர் போற்றான் கடுஞ்சுரையா மீட்ட மகனை வினவுறா - னோட்டந்து தன்னெதிர் தோன்றும் புனிற்றாத் தழீஇக்கலுழு மென்னெதிர்ப் பட்டாயோ வென்று.’’ (பெரும்பொருள்விளக்கம்.
புறத்திரட்டு.1249. நிரைமீட்சி.7) இது
கண்டோர் கூற்று. தந்து
நிரை - நிரைகொண்டோர் தாங்கொண்ட நிரையைத் தம் மூர்ப்புறத்துத் தந்து நிறுத்தலும், நிரைமீட்டோர்தாம் மீட்ட நிரையினைத் தந்து நிறுத்தலும்; உ-ம்: ‘‘குளிறு குரன்முரசங் கொட்டின் வெரூஉங் களிறொடுதேர் காண்டலு மாற்றா - நளிமணி நல்லா னினநிரை நம்மூர்ப் புறங்கான மெல்லாம் பெறுக விடம்.’’ ‘‘கழுவொடு பாகர் கலங்காமல் யாத்துத் தொழுவிடை யாயந் தொகுமி - னெழுவொழித்தாற் போமே யிவையிவற்றைப் போற்றுமின் புல்லொடுநீர் தாமேய் புலம்போலத் தந்து.’’ இவை
கண்டோர் கூற்று. பாதீடு
- ஈத்தலும் ஈதலும் போலப் பாத்தலும் பாதலும் ஒன்றாதலிற் பாதீடாயிற்று; வேந்தனேவலாற் றாங்கொண்ட
நிரையைப் பகுத்துக்கோடலும், மீட்டோருந் தத்தநிரையைப் பகுத்துக்கோடலும், நிரையை இழந்தோர்க்குப் பகுத்துக் கொடுத்தலும்; உ-ம்:
|