நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3305
Zoom In NormalZoom Out


கூட்டிய      துடிநிலையும்;    சிறந்த    கொற்றவை      நிலையும்
-அத்தொழிற்குச்  சிறந்த கொற்றவைக்குப் பரவுக்கடன் கொடுக்குங்கால்
அவளது  நிலைமை  கூறுதலும்; அத்திணைப்புறனே -  அவ்விருவகை
வெட்சிக்கும் புறனடையாம் எ-று.

‘‘நித்திலஞ்செய் பட்டமு நெற்றித் திலதமு
மொத்திலங் மெய்பூசி யோர்ந்துடீஇத் - தத்தந்
துடியரோ டூர்ப்புறஞ் சூழ்ந்தார் மறவர்
குடிநிரை பாராட்டக் கொண்டு.’’

இஃது  இருவகை  வட்சிக்கும்  பொது,  நிரை  கொண்டோர்க்கும்
மீட்டோர்க்கும் துடிகொட்டிச் சேறலொத்தலின்.

‘‘அருமைத் தலைத்தரு மானிரையு ளையை
யெருமைப் பலிகோ ளியைந்தா - ளரசனும்
வேந்தன்மேற் செல்வான் விறல்வஞ்சி சூடானென்
றியாந்தன்மேற் சீறாம லின்று.’’

இதனானே   வருகின்ற   வஞ்சித்திணைக்குங்    கொற்றவைநிலை
காரணமாயிற்று,     தோற்றோர்க்குக்     கொற்றம்      வேண்டியும்
வென்றோர்க்கும்  மேற்செல்லுங்காற்  கொற்றம்  வேண்டியும்  வழிபடு
வராதலின்.

இனிக் கொற்றவைநிலைப் பகுதியுட் சில வருமாறு:-

‘‘நச்சிலைவேற் காளைக்கு நாளையே கொற்றவை
கைச்சிலையு நல்கும்யாங் காணேங்கொல் - மிச்சில்கூர்
வாளின்வாய்த் தீண்டாத வார்குருதி மெய்சாய்ப்பத்
தாளின்வாய் வீழ்த்தான் றலை.’’

இஃது  உயிர்ப்பலி; இது பொதுவகையான் இருவகை  வெட்சிக்கும்
வஞ்சிக்கும் பொது.

‘‘ஆடிப்பண் பாடி யளவின்றிக் கொற்றவை
பாடினி பாடற் படுத்துவந்தா - ணாடிய
தோளுழலை யாடுவோன் றோளினுந் தூக்கமைத்த
தாளுழலை யடுவோன் றாள்.’’

இது  குருதிப்பலி;  பொதுவகையான்    இருவகை   வெட்சிக்கும்
வஞ்சிக்கும் பொது.

புறத்திணை வழுஏழ் ஆவன
 

60. வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
வெறியாட் டயர்ந்த காந்தளும், உறுபகை
வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்துபுகழ்ப்
போந்தை வேம்பே யாரென வரூஉம்
மாபெருந் தானையர் மலைந்த பூவும்
வாடா வள்ளி வயவ ரேத்திய
ஓடாக் கழனிலை உளப்பட ஓடா
உடல்வேந் தடுக்கிய வுன்ன நிலையும்
மாயோன்