நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3306
Zoom In NormalZoom Out


மேய மன்பெருஞ் சிறப்பிற்
றாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும்
ஆரமர் ஓட்டலும் ஆபெயர்த்துத் தருதலுஞ்
சீர்சால் வேந்தன் சிறப்பெடுத் துரைத்தலுந்
தலைத்தா ணெடுமொழி தன்னொடு புணர்த்தலும்
அனைக்குரி மரபினது கரந்தை யன்றியும்
வருதார் தாங்கல் வாள்வாய்த்துக் கவிழ்தலென்று
இருவகைப் பட்ட பிள்ளை நிலையும்
வாள்மலைந் தெழுந்தோனை மகிழ்ந்துபறை தூங்க
நாடவற் கருளிய பிள்ளை யாட்டுங்
காட்சி கால்கோ ணீர்ப்படை நடுதல்
சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென்று
இருமூன்று வகையிற் கல்லொடு புணரச்
சொல்லப்பட்ட வெழுமூன்றுதுறைத்தே
 

இது   முன்   இருபெருவேந்தர்க்கும்  போர்செயத்  தொடங்குதற்
குரியபொதுநிலமை  கூறிய  அதிகாரத்தானே  புறத்திணைக் கெல்லாம்
பொதுவாகிய  வழுவேழும் உணர்த்துத னுதலிற்று; இவை வேத்தியலின்
வழீஇத்   தன்னுறு   தொழிலாய்   வருதலின்   வழுவாயின.  இவை
அகத்திற்கும் புறத்திற்கும் உரியவாய் வருவனவும், புறத்திற்  கெல்லாம்
பொதுவாய் வருவனவு மாதலிற் பொதுவியலுமாயின.

(இ-ள்.)    வெறி  அறி  சிறப்பின்  -  தெய்வத்திற்குச்  செய்யுங்
கடன்களை  அறியுஞ்  சிறப்பினையும்;  வெவ்வாய் வேலன் - உயிர்க்
கொலை   கூறலின்   வெவ்வாயினையும்   உடையனாகிய   வேலன்;
வெறியாட்டு  அயர்ந்த  காந்தளும் - தெய்வமேறி யாடுதலைச் செய்த
காந்தளும்;

செவ்வேள்வேலைத்  ான் ஏந்தி நிற்றலின் வேலனென்றார். காந்தள்
சூடி  ஆடுதலிற்  காந்தளென்றார்.  வேலனைக்  கூறினமையிற் கணிக்
காரியையுங்    கொள்க.    காந்தளையுடைமையானும்    பனந்தோடு
உடைமையானும் மகளிரை வருத்துதலானும் வேலன் வெறியாட்டயர்ந்த
என்றதனானும்   வேலன்   ஆடுதலே  பெரும்பான்மை;  ஒழிந்தோர்
ஆடுதல் சிறுபான்மை என்றுணர்க.