நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3311
Zoom In NormalZoom Out


விறல்வெய் யோனு
மணிமயி லுயரிய மாறா வென்றிப்
பிணிமுக வூர்தி யொண்செய் யோனுமென
ஞாலங் காக்குங் கால முன்பிற்
றோலா நல்லிசை நால்வ ருள்ளுங்
கூற்றொத் தீயே மாற்றருஞ் சீற்றம்
வலியொத் தீயே வாலி யோனைப்
புகழொத் தீயே யிகழுந ரடுநனை
முருகொத் தீயே முன்னியது முடித்தலி
னாங்காங் கவரவ ரொத்தலின் யாங்கு
மரியவு முளவோ நினக்கே...................’’       
(புறம்.56)

என இதனுள் அங்ஙனம் உவமித்தவாறு காண்க.

‘‘குருந்த மொசித்தஞான்றுண்டா லதனைக்
கரந்த படி யெமக்குக் காட்டாய் - மரம்பெறாப்
போர்பிற் குருகுறங்கும் பூம்புன னீர்நாட
மார்பிற் கிடந்த மறு’’

இது சோழனை மாயோனாகக் கூறிற்று.

‘‘ஏற்றூர்தி யானு மிகல்வெம்போர் வானவனு
மாற்றலு மாள்வினையு மொத்தொன்றி னொவ்வாரே
கூற்றக் கணிச்சியோன் கண்மூன் றிரண்டேயா
மாற்றல்சால் வானவன் கண்’’

இது சேரனை அரனாகக் கூறிற்று.

‘‘இந்திர னென்னி னிரண்டேக ணேறூர்ந்த
வந்தரத்தா னென்னிற் பிறையில்லை - யந்தரத்துக்
கோழியா னென்னின் முகனொன்றே கோதையை
யாழியா னென்றுணரற் பாற்று’’

இது சேரனைப் பல தேவராகக் கூறிற்று.

‘‘கோவா மலையாரங் கோத்த........’’  (சிலப்ஆய்ச்.உள்வரி)

‘‘முந்நீரி னுள்புக்கு மூவாக்........’’    (சிலப்.ஆய்ச்.உள்வரி)

‘‘பொன்னிமயக் கோட்டுப் புலி........’’ (சிலப்.ஆய்ச்.உள்வரி)

என்பனவும் அவை.

‘‘தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்தினை
.........சிறுகுடி யோரே’                     
(கலி.52)

இஃது  உரிப்பொருட் டலைவனை முருகனாகக் கூறியது. இங்ஙனம்
புறத்தும்   அகத்தும்   வருதலிற்  பொதுவாயிற்று.  இறப்ப  உயர்ந்த
தேவரை மக்கட்கு உவமையாகக் கூறலின் வழுவுமாயிற்று.

‘தாவா’  என்றதனானே  அரசர்புகழைக்    காட்டுவாழ்வோர்க்குக்
கூறுதலும், அவரை அரசர் பெயராற் கூறுதலுங் கொள்க.

‘‘வீங்குசெலற் பரிதி வெவ்வெயி லெறித்தலி
னாங்க ணோக்கா தாங்கு நீபோ
யரசுநுகம் பூண்ட பின்னர் நின்னிலை
முரசுடை வேந்தர் முகந்திரிந் தனரே
யஃதான்
றுவவுமதி நோக்குநர் போலப் பாணரொடு
வயிரியர் பொருநர்நின் பதிநோக் கினரே
யதனா
னதளுங் கோடு முத