னே போர்க்குறித்த படையாளருந் தானும் உடனுண்பான் போல்வதொரு முகமன் செய்தற்குப் பிண்டித்து வைத்த உண்டியைக் கொடுத்தல் மேயின பெருஞ்சோற்று நிலையும்; உ-ம்: ‘‘இணர்ததை ஞாழற் கரைகெழு பெருந்துறை மணிக்கலத் தன்ன மாயிதழ் நெய்தற் பாசடைப் பனிக்கழி துழைஇப் புன்னை வாலிணர்ப் படுசினை குருகிறை கொள்ளு மல்குறு கான லோங்குமண லடைகரைத் தாழடும்பு மலைந்த புணரிவளை ஞரல விலங்குகதிர் முத்தமொடு வார்துகி ரெடுக்குந் தண்கடற் படப்பை மென்பா லனவுங் காந்தளங் கண்ணிக் கொலைவில் வேட்டுவர் செங்கோட் டாமா னூனொடு காட்ட மதனுடை வேழத்து வெண்கோடு கொண்டு பொன்னுடை நியமத்துப் பிழிநொடை கொடுக்கும் குன்றுதலை மணந்த புன்புல வைப்புங் கால மன்றியுங் கரும்பறுத் தொழியா தரிகா லவித்துப் பல்பூ விழவிற் றேம்பாய் மருத முதல்படக் கொன்று வெண்டலைச் செம்புனல் பரந்துவாய் மிகுக்கும் பலசூழ் பதப்பர் பரிய வெள்ளத்துச் சிறைகொள் பூசலிற் புகன்ற வாயம் முழவிமிழ் மூதூர் விழவுக்காணுஉப் பெயருஞ் செழும்பல் வைப்பிற் பழனப்பாலும் ஏனல் உழவர் வரகுமீ திட்ட காண்மிகு குளவிய வன்புசே ரிருக்கை மென்றினை நுவணை முறைமுறை பகுக்கும் புன்புலந் தழீஇய புறவணி வைப்பும் பல்பூஞ் செம்மற் காடுபய மாறி யரக்கத் தன்ன நுண்மணற் கோடுகொண் டொண்ணுதல் மகளிர் கழலொடு மறுகும் விண்ணுயர்ந் தோங்கிய கடற்றவும் பிறவும் பணைகெழு வேந்தரும் வேளிரு மொன்றுமொழிந்து கடலவுங் காட்டவு மரண்வலியார் நடுங்க முரண்மிகு கடுங்குரல் விசும்படை பதிரக் கடுஞ்சினங் கடாஅய் முழங்கு மந்திரத் தருந்தெறன் மரபிற் கடவுட் பேணிய ருயர்ந்தோ னேந்திய வரும்பெறற் பிண்டங் கருங்கட் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க நெய்த்தோர் தூஉய நிறைமகி ழிரும்பலி யெறும்பு மூசா விறும்பூது மரபிற் கருங்கட் காக்கையொடு பருந்திருந் தார வோடாப் பூட்கை
யொண்பொறி
|