நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3335
Zoom In NormalZoom Out


யோரையுங்     கொல்லாது     விடுதலுங்,    கூறிப்    பொருதலும்
முதலியனவாம்.

இனி ‘ஆகு’மென்றதனான் எதிர்சென்ற வேந்தன் பொருது தோற்றுச்
சென்று    அடைத்திருத்தலும்    உழிஞையாம்.   மற்றை   வேந்தன்
வளையாது மீளின் அவனடைத்தது உழிஞையாகா தென்றுணர்க.    (10)

உழிஞை எட்டுத் துறைத்து ஆதல்
 

66. அதுவே தானு மிருநால் வகைத்தே.
 

இது     முற்கூறிய        முற்றலுங்     கோடலும்     ஒருவன்
தொழிலன்றென்பதூஉம்,   முற்கூறியதுபோல   ஒருதுறை   இருவர்க்கு
முரியவாகாது,   ஒருவர்க்கு   நான்கு  நான்காக  எட்டாமென்பதூஉங்
கூறுகின்றது.

(இ-ள்.)  அதுவே தானும் - அவ்வுழிஞைத் துறைதானும்; இருநால்
வகைத்து.  மதில்முற்றிய  வேந்தன்  கூறு  நான்கும் அகத்தோன்கூறு
நான்குமென எட்டு வகைத்து எ-று.

அது மேற்கூறுப.                                     (11)

அவை எட்டுத்துறையுமாவன
 

67கொள்ளார் தேஎங் குறித்த கொற்றமும்
உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும்
தொல்லெயிற் கிவர்தலுந் தோலின் பெருக்கமும்
அகத்தோன் செல்வமு மன்றி முரணிய
புறத்தோ ணணங்கிய பக்கமுந் திறப்பட
வொருதான் மண்டிய குறுமையு முடன்றோர்
வருபகை பேணா ராரெயி லுளப்படச்
சொல்லப் பட்ட நாலிரு வகைத்தே.
 

இது முற்கூறிய  நாலிரு துறைக்கும் பெயரும் முறையுந் தொகையுங்
கூறுகின்றது.

(இ-ள்.)  கொள்ளார்  தேஎங்  குறித்த  கொற்றமும்  -  பகைவர்
நாட்டினைத்  தான்  கொள்வதற்கு  முன்னேயுங்  கொண்டான் போல
வேண்டியோர்க்குக் கொடுத்தலைக் குறித்த வெற்றியும்

தன்னை     இகழ்ந்தோரையுந்     தான்     இகழ்ந்தோரையும்
கொள்ளாரென்ப.

உ-ம்:

‘‘மாற்றுப் புலந்தோறு மண்டிலமாக் கள்செல
வேற்றுப் புலவேந்தர் வேல்வேந்தர்க் - கேற்ற
படையொலியிற் பாணொலி பல்கின்றா லொன்னா
ருடையன தாம்பெற்று வந்து.’’
 
  (பெரும் பொருள் விளக்கம் புறத்திரட்டு.1272.பாசறை 5)

என வரும்.

‘‘கழிந்தது பொழிந்தென’’ என்னும் (203) புறப்பாட்டினுள்,

‘‘ஒன்னார் ராரெயி லவர்கட் டாகவு நுமதெனப்
பாண்கட னிறுக்கும் வள்ளியோய்’’

என்பதும் அது.

‘‘ஆனா    வீகை யடுபோர்’’  என்னும் (42) புறப்பாட்டும் அது.
இராமன்  இலங்கை கொள்வதன் முன் வீடணற்குக் கொடுத்த துறையும்
அது.

உள்ளியது     முடிக்கும் வேந்தனது சிறப்பும் - அவ்வாறு குறித்த
குறிப்பினை     முடிக்கின்ற    வேந்தனது    சிறப்பினை    அவன்
படைத்தலைவன் முதலியோரும் வேற்று வே