நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3338
Zoom In NormalZoom Out


தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே,
நான்கே,அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து
திணிநெடுங் குன்றந் தேன்சொரி யும்மே
வான்க ணற்றதன் மலையே வானத்து
மீன்க ணற்றவன் சுனையே யாங்கு
மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும்
புலந்தொறும் பரப்பிய தேரினி ராயினுந்
தாளிற் கொள்ளலிர் வாளிற் றாரலன்
யானறி குவனது கொள்ளு மாறே
சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி
விரையொலி கூந்தனும் விறலியர் பின்வர
ஆடினிர் பாடினிர் செலினே
நாடுங் குன்று மொருங்கீ யும்மே’          
  (புறம்.109)

என்னும் புறப்பாட்டும் அது.

அன்றி     முரணிய புறத்தோன் அணங்கிய பக்கமும் - மாறுபட்ட
புறத்தோனை     அகத்தோன்    தன்    செல்வத்தான்    அன்றிப்
போர்த்தொழிலான் வருத்திய கூற்றும்;

உ-ம்:

‘‘கலையெனப் பாய்ந்த மாவு மலையென
மயங்கம ருழந்த யானையு மியம்படச்
சிலையலைத் துய்ந்த வயவரு மென்றிவை
பலபுறங் கண்டோர் முன்னா ளினியே
யமர்புறங் கண்ட பசும்புண் வேந்தே
மாக்களி றுதைத்த கணைசேர் பைந்தலை
மூக்கறு நுங்கிற் றூற்றயற் கிடப்பக்
களையாக் கழற்காற் கருங்க ணாடவர்
உருகெழு வெகுளியர் செறுத்தன ரார்ப்ப
மிளைபோ யின்று நாளை நாமே
யுருமிசை கொண்ட மயிர்க்கட்
டிருமுர சிரங்க வூர்கொள் குவமே.’’
    (தகடூர்யாத்திரை)

என வரும்.

இது சேரமான், பொன்முடியாரையும்  அரிசில்கிழாரையும்  நோக்கித்
தன்படைபட்ட தன்மைகூறக் கேட்டோற்கு, அவர் கூறியது.

திறப்பட  ஒரு  தான்  மண்டிய  குறுமையும்  -  அகத்திருந்தோன்
தன்னரணழிவு தோன்றியவழிப் புறத்துப் போர்செய்யுஞ் சிறுமையும்;

உ-ம்:

‘‘வருகதில் வல்லே வருகதில் வல்லென
வேந்துவிடு விழுத்தூ தாங்காங் கிசைப்ப
நூலரி மாலை சூடிக் காலின்
தமியன் வந்த மூதி லாளன்
அருஞ்சமந் தாங்கி முன்னின் றெறிந்த
வொருகை யிரும்பிணத் தெயிறு மிறையாகத்
திரிந்த வாய்வா டிருத்தாத்
தனக்கிரிந்த தானை பெயர்