புற நகுமே’’
(புறம்.284) என வரும். உடன்றோர்
வருபகை பேணார் ஆர்எயில் உளப்பட-புறத்தோன் அகத்தோன்மேல்
வந்துழி அவன் பகையினைப் போற்றாது அகத்தோன் இகழ்ந்திருத்தற்கு அமைந்த மதிலரண் கூறுத லகப்பட; உ-ம்: ‘‘மொய்வேற் கையர் முரண்சிறந் தொய்யென வையக மறிய வலிதலைக் கொண்ட தெவ்வழி யென்றி வியன்றார் மார்ப வெவ்வழி யாயினு மவ்வழித் தோன்றித் திண்கூ ரெஃகின் வயவர்க் காணிற் புண்கூர் மெய்யினுரா அய்ப் பகைவர் பைந்தலை யுதைத்த மைந்துமலி தடக்கை யாண்டகை மறவர் மலிந்துபிறர் தீண்டல் தகாது வேந்துறை யரணே’’
(தகடூர் யாத்திரை) இஃது
அகத்தோன் செல்வம் போற்றுதற்கு ஏதுவாகிய
முழுவரண் கூறுதலிற் செல்வத்துள் அடங்காதாயிற்று. இது பொன்முடியார்
தகடூரின் தன்மை கூறியது. சொல்லப்பட்ட
நாலிருவகைத்தே மேலிரு நால்வகைத்
தென்று சொல்லப்பட்ட இருநான்கு பகுதியதாம்
உழிஞைத் திணை எ-று. முற்கூறிய
தொகையேயன்றி ஈண்டுந்
தொகை கூறினார். அந்நாலிரண்டுமேயன்றி
அவைபோல்வனவும் நாலிரண்டு
துறை தோன்று மென்றற்கு. அவை புறத்து வேந்தன் தன் துணையாகிய அரசனையாயினுந் தன் படைத்தலைவரையாயினும் ஏவி அகத்து வேந்தர்க்குத் துணையாகிய அரசனது முழு முதலரண் முற்றிலும் அவன்றா னதனைக் காவல் கோடலும் நிகழ்ந்தவிடத்தும் இவ் விருநான்கு வகையும் இருவர்க்கு முளவாதலாம். உதாரணம் முற்காட்டியவே; வேறு வேறு காட்டினும் அமையும். இத்திணைக்குப்
‘படையியங்கரவ’ (புறம்.8) முதலியனவும் அதிகாரத்தாற் கொள்க. அது, ‘‘இலங்குதொடி மருப்பிற் கடாஅம் வார்த்து நிலம்புடையூஉ வெழுதரும் வலம்படு குஞ்சர மெரியவிழ்ந் தன்ன விரியுளை சூட்டிக் கால்கிளர்ந்
தன்ன
|