அகத்தோரும் போர்
செய்தலும்; உ-ம்: ‘‘சேணுயர் ஞாயிற் றிணிதோளா னேற்றவு மேணி தவிரப்பாய்ந் தேறவும் - பாணியாப் புள்ளிற் பரந்து புகல்வேட்டார் போர்த்தொழிலோர் கொள்ளற் கரிய குறும்பு’’ இது
புறத்தோர் ஏணிமயக்கம். ‘‘இடையெழுவிற் போர்விலங்கும் யானையோர் போலு மடையமை யேணி மயக்கிற் - படையமைந்த ஞாயில் பிணம்பிறக்கித் தூர்த்தார் நகரோர்க்கு வாயி லெவனாங்கொல் மற்று’’ இஃது அகத்தோர்
ஏணிமயக்கம். இனி இரண்டும் ஒருங்கு வருதலுங் கொள்க. உ-ம்: ‘‘பொருவரு மூதூரிற் போர்வேட் டொருவர்க் கொருவ ருடன்றெழுந்த காலை - யிருவரும் மண்ணோடு சார்த்தி மதில்சார்த் தியவேணி விண்ணொடு சார்த்தி விடும்’’ (பெரும்பொருள்விளக்கம்.புறத்திரட்டு
1330.எயில்கோடல்9) என வரும். கடைஇச்
சுற்று அமர் ஒழிய வென்று
கைக்கொண்டு முற்றிய முதிர்வும் - புறத்தோன் தன் படையைச்
செலுத்திப் புறமதிலிற் செய்யும் போரின்றாக, அகத்தோன் படையை வென்று அப் புறமதிலைக் கைக்கொண்டு, உள்மதிலை வளைத்த வினை முதிர்ச்சியும்; அகத்தோன் தன் படையைச் செலுத்திப் புறமதிலிற்செய்யும் போரின்றாகப், புறத்தோன் படையைத் தள்ளி வென்று அப்புறமதிலைக் கைக்கொண்டு வளைத்த வினை முதிர்ச்சியும்; உ-ம்: ‘‘கடல்பரந்து மேருச்சூழ் காலம்போற் சென்றோர் கொடிமதில் காத்தோரைக் கொல்லக் - கடலெதிர் தோன்றாப் புலிபோ லரண்மறவர் தொக்கடைந்தார் மான்றேரான் மூதூர் வரைப்பு’’ இது புறத்தோன் முற்றிய
முதிர்வு. ‘‘ஊர்சூழ் புரிசையுடன்சூழ் படைமாயக் கார்சூழ்குன் றன்ன கடைகடந்து - போர்மறவர் மேகமே போலெயில் சூழ்ந்தார் விலங்கல்போன் றாகஞ்சேர் தோள்கொட்டி யார்த்து’’ இஃது அகத்தோன் முற்றிய
முதிர்வு. அன்றி
முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சியும். புற மதிலிலன்றி உள்மதிற்கட் புறத்தோனான் முற்றப்பட்ட அகத்தோன் விரும்பின மதில்காவலும்; அவன் காத்தலின்றித் தான் சூழப்பட்ட இடத்திருந்த புறத்
|