நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3346
Zoom In NormalZoom Out


லைவர் தலைக்கூட வீற்றிருந்தா
னுண்டற்ற சோற்றா ரொழிந்து’’

இஃது அகத்தோன் தொகைநிலை.

வகைநால்   மூன்றே துறை என மொழிப - அங்ஙனம் ஒன்று இரு
வகைப்பட  வந்த  பன்னிரண்டேயாம் உழிஞைத்துறை என்று கூறுவர்
ஆசிரியர் எ-று.

முற்றலையுங்       கோடலையும்    இருவகையென்றார்.   துறை
யென்றதனான்  அவற்றின்  பகுதியாய்  வருவனவும்  அத்துறைப்பாற்
படுத்துக.   உழையரை   அழைத்து  நாட்கொள்க  என்றலும்,  அவர்
அரசர்க்கு   உரைப்பனவுங்,   குடைச்சிறப்புக்   கூறுவனவும்,  முரசு
முதலியன  நாட்கோடலும்,  பிறவுங்  குடைநாட் கோடலாய் அடங்கும்.
இது   வாணாட்   கோடற்கும்  ஒக்கும். பொருவார்க்கும்  அல்லுழிப்
போவார்க்குங்   குடை   பொதுவாகலின்  முற்கூறி,   மேல்வருகின்ற
போர்த்தொழிற்கே   சிறத்தலின்   வாளினைப்  பிற்கூறினார்.  இவை
போர்த்தொழிற்கு  ஏதுவாகலின்  முற்கூறினார்.  எயிலுட்  பொருதலும்,
புட்போல   உட்பாய்தலும்,   ஆண்டுப்பட்டோர்  துறக்கம்  புகுதலும்,
பிறவும் பாசிமறத்தின்பாற் படும். ஏறுந் தோட்டியுங் கதவும் முதலியன
கோடல்  அகமிசைக்கு  இவர்ந்தோன்  பக்கத்தின்பாற்படும்.  படிவம்
முதலியன  கோடல்  குடுமிகொண்ட  மண்ணுமங்கலத்தின்பாற்  படும்.
புறத்தோன்  இருப்பிற் றொகைநிலைப் பாற்படும். ‘துறையென மொழிப’
என   எல்லாவற்றையுந்   துறையென்று  கூறுகின்றவர்  தொகைநிலை
யென்னுந்   துறையெனத்  தொகைநிலையை  விதந்தோதினார்,  அது
பலவாகாது  இரண்டு  துறைப்பட்டு  வேறு வேறு துறையாம் என்றற்கு.
அது   தும்பைத்  தொகைநிலைபோல்  இருபெரு  வேந்தரும்  உடன்
வீழ்தலுஞ்    சிறுபான்மை   உளதாமென்   றுணர்க.   எதிர்செல்லா
தடைத்திருந்தோன்    புறப்பட்டுப்   படுதல்   சிறுபான்மையாதலின்,
இதனையும் வேறொரு துறையாக்கிப் பதின்மூன் றென்னாராயினார்.

உ-ம்

‘‘அறத்துறைபோ லாரெயில் வேட்ட வரசர்
மறத்துறையு மின்னாது மன்னோ - நிறைச்சுடர்க
ளொன்றி வரப்பகல்வா யொக்க வொளிதேய்ந்தாங்
கின்றிவர் வீழ்ந்தா ரெதிர்ந்து’’

என வரும்.

இது     வேறு  வேறு  வருதலுஞ்  சிறுபான்மை.  இன்னுந்  ’துறை’
யென்றதனானே  புறத்தோன்  கவடிவித்துதலுந்  தொகை  நிலைப்பாற்
பட்டுழி அகத்தோர்க்குச் செல்லா