ரைப்ப
போன்றன தங்குறை - மான்றேர்மேல் வேந்து தலைபனிப்ப விட்ட வுயிர்விடாப் பாய்ந்தன மேன்மேற் பல.’’
(பெரும்பொருள்விளக்கம்.புறத்திரட்டு.1350.அமர் 6) இது வஞ்சிப்புறத்துத் தும்பையாய் இருநிலந் தீண்டாவகை. ‘‘பருதிவேன் மன்னர் பலர்காணப் பற்றார் குருதிவாள் கூறிரண்டு செய்ய - வொருதுணி கண்ணிமையா முன்னங் கடிமதிலுள் வீழ்ந்ததே மண்ணெமதே மண்ணெமதே வென்று.’’ இஃது
உழிஞைப்புறத்துத் தும்பையாய் இருநிலந் தீண்டா
வகை. இது திணைக்கெல்லாம் பொதுஅன்மையிற் றிணையெனவும் படாது; திணைக்கே சிறப்பிலக்கணமாதலிற் றுறையெனவும் படாது; ஆயினுந் துறைப்பொருள் நிகழ்ந்து கழிந்தபிற் கூறியதாமென் றுணர்க.
(16) தும்பை பன்னிரு
துறைத்து ஆதல்
|