நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3355
Zoom In NormalZoom Out


‘‘இவற்கீத் துண்மதி கள்ளே சினப்போ
ரினக்களிற்றி யானை யியறேர்க் குரிசி
னுந்தை தந்தைக் கிவன்றந்தை தந்தை
யெடுத்தெறி ஞாட்பி னிமையான் றச்ச
னடுத்தெறி குறட்டி னின்றுமாய்ந் தனனே
மறப்புகழ் நிறைந்த மைந்தினோ னிவனு
முறைப்புழி யோலை போல
மறைக்குவன் பெருமநிற் குறித்துவரு வேலே.’’
(புறம்.290)

இதுவும் அதன்பாற்படும்.

அன்றியும்  இருவர் தலைவர்  தபுதிப்பக்கமும். இருபெரு வேந்தர்
தானைத்தலைவருந்  தத்தம்  வேந்தர்க்காகித்  தார்தாங்குதலே யன்றி
அத்தலைவரிருவருந் தம்மிற்பொருது வீழ்தற் கண்ணும்;

பக்கமென்றதனான் அவரு ளொருவரொருவர்  வீழ்தலுங்  கொள்க.

உ-ம்:

‘‘ஆதி சான்ற மேதகு வேட்கையி
னாளுங் கோளு மயங்கிய ஞாட்பின்
மதியமு ஞாயிறும் பொருவன போல
வொருத்தி வேட்கையி னுடன்வயிற்றிருவர்
செருக்கூர் தண்டி னெருக்கின ரெனவு
மரவணி கொடி யோற் கிளையோன் சிறுவனும்
பெருவிறல் வீமற் கிளையோன் சிறுவனு
முடன்றமர் தொடங்கிய காலை யடங்கா
ருடங்குவருஞ் சீற்றத்துக் கைப்படைவழங்கி
யிழந்தவை கொடாஅர் கிடந்தன வாங்கித்
தேர்மிசைத் தமியர் தோன்றார் பார்மிசை
நின்றுசுடர் நோக்கியு மொன்றுபடத் திருகியுந்
தும்பியடி பிணங்கு மண்ணிற் றோற்றமொடு
கொடிகொடி பிணங்கி வீழ்வன போல
வொருவயின் வீழ்ந்தடு காலை
யிருபெரு வேந்தரும் பெரிதுவந் தனரே.’’

இப் பாரதப்பாட்டினுள் அவ்வாறாதல் கண்டுகொள்க.

இனித் தலைவரேயன்றிப் பிறரும் அவ்வாறு பொரினும் அதன்பாற்
படுத்துக.

உடைபடை  ஒருவன் புக்கு ஒருவனைக் கூழைதாங்கிய எருமையும்
-  தனது  உடைந்த  படைக்கண்ணே  ஒரு படைத்தலைவன் சென்று
நின்று   அங்ஙனங்  கெடுத்த  மாற்று  வேந்தன்  படைத்தலைவனை
அவன் எதிர்கொண்டுநின்ற பின்னணியோடே  தாங்கின கடாப்போலச்
சிறக்கணித்து நிற்கு நிலைமைக்கண்ணும்;

ஒருவ னொருவனைத் தாங்கின எருமையென முடிக்க.

உ-ம்:

‘‘சீற்றங் கனற்றச் சிறக்கணித்துச் செல்லுங்கால்
வேற்றெருமை