நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3358
Zoom In NormalZoom Out


ற லுலக நிறைய
விருந்துபெற் றனரால் பொலிகநும் புகழே’’
    (புறம்.62)

என வரும்.

செருவகத்து  இறைவன் வீழ்ந்தெனச்  சினைஇ  ஒருவன் மண்டிய
நல்லிசை   நிலையும்   -  போரிடத்தே  தன்வேந்தன்  வஞ்சத்தாற்
பட்டனாகச்சினங்  கொண்ட  மனத்தனாய்ப் பெரும்படைத் தலைவன்
தலைமயங்கிப் பொருத நல்ல புகழைப் பெற்ற நிலைமைக் கண்ணும்;

அது  குருகுல  வேந்தனைக் குறங்கறுத்தஞான்று இரவு ஊரெறிந்து
பாஞ்சாலரையும்   பஞ்சவர்மக்க  ளைவரையுங்   கொன்று  வென்றி
கொண்ட அசுவத்தாமாவின்  போர்த்தொழில்  போல்வன. தன்னரசன்
அறப்போரிடத்துப்   படாது  வஞ்சனையாற்  படுதலின்,  அவனுக்குச்
சினஞ்   சிறந்தது.   இச்சிறப்பில்லாத   தும்பையும்  இக்கலியூழிக்கா
மென்பது ‘சென்று தலையழிக்குஞ் சிறப்பிற்று’ (தொல். பொ. புற. 15)
என்புழிக் கூறிற்று.

உ-ம்:

‘‘மறங்கெழு வேந்தன் குறங்கறுத் திட்டபி
னருமறை யாசா னொருமகன் வெகுண்டு
பாண்டவர் வேர்முதல் கீண்டெறி சீற்றமோ
டிரவூ ரறியாது துவரை வேந்தொடு
மாதுலன் றன்னை வாயிலி னிறீஇக்
காவல் பூட்டி யூர்ப்புறக் காவயி
னைவகை வேந்தரோ டரும்பெறற் றம்பியைக்
கைவயிற் கொண்டு கரியோன் காத்தலிற்
றொக்குடம் பிரீஇத் துறக்க மெய்திய
தந்தையைத் தலையற வெறிந்தவ னிவனெனத்
துஞ்சிடத் தெழீஇக் குஞ்சி பற்றி
வடாது பாஞ்சால னெடுமுதற் புதல்வனைக்
கழுத்தெழத் திருகிப் பறித்த காலைக்
கோயிற் கம்பலை யூர்முழு துணர்த்தலிற்
றம்பியர் மூவரு மைம்பான் மருகரு
முடன்சமர் தொடங்கி யொருங்குகளத் தவிய
வாள்வாய்த்துப் பெயர்ந்த காலை யாள்வினைக்
கின்னோ ரினிப்பிற ரில்லென வொராங்குத்
தன்முதற் றாதையொடு கோன்முத லமரர்
வியந்தனர் நயந்த விசும்பி
னியன்றலை யுலகமு மறிந்ததா லதுவே’’

இப்பாரதப்பாட்டினுள் அவ்வாறாதல் காண்க.

ஒருவற்குப் பல்  படை உடைதலின்  மற்றவன்  ஒள்வாள்  வீசிய
நூழிலும் - அங்ஙனம் நல்லிசை எய்திய ஒருவற்கு வஞ்சத்தாற்