நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3362
Zoom In NormalZoom Out


சந்தமுமாம்.

தருமநூலாவன, உலகியல்பற்றி  வரும் மனுமுதலிய  பதினெட்டும்;
இவை வேதத்திற்கு அங்கமானமையின் வேறாயின.

இனி,   இதிகாச புராணமும் வேதத்திற்கு மாறுபடுவாரை மறுக்கும்
உறழ்ச்சிநூலும்   அவரவர்  அதற்கு  மாறுபடக்  கூறும்  நூல்களும்
கடையாய   ஓத்து.  எழுத்துஞ்  சொல்லும்  பொருளும்  ஆராய்ந்து
இம்மைப்பயன்   தருதலின்   அகத்தியம்  தொல்காப்பியம்  முதலிய
தமிழ்நூல்களும்   இடையாய  ஓத்தாமென்றுணர்க.   இவையெல்லாம்
இலக்கணம். இராமாயணமும் பாரதமும் போல்வன இலக்கியம்.

இனித்  தமிழ்ச்செய்யுட்கண்ணும்  இறையனாரும்  அகத்தியனாரும்
மார்க்கண்டேயனாரும்   வான்மீகனாருங்  கவுதமனாரும்  போல்வார்
செய்தன  தலையும்,  இடைச்சங்கத்தார் செய்தன  இடையுங்,  கடைச்
சங்கத்தார் செய்தன கடையுமாகக் கொள்க.

இங்ஙனம்    ஓத்தினையும்   மூன்றாகப்  பகுத்தது,   அவற்றின்
சிறப்பையுஞ் சிறப்பின்மையையும் அறிவித்தற்கு. இவற்றுள் தருக்கமுங்
கணிதமும் வேளாளர்க்கும் உரித்தாம்.

இனி  ஓதுவிப்பனவும்  இவையேயாகலின் அவைகட்கும்  இப்பகுதி
மூன்றும்  ஒக்கும். ஓதுவித்தலாவது கொள்வோனுணர்வு வகை அறிந்து
அவன்     கொள்வரக்       கொடுக்கும்      ஈவோன்றன்மையும்
ஈதலியற்கையுமாம்.   வேட்டலாவது,   ஐந்தீயாயினும்  முத்தீயாயினும்
உலகியற்றீயாயினும்  ஒன்று பற்றி மங்கல மரபினாற் கொடைச்சிறப்புத்
தோன்ற  அவிமுதலியவற்றை  மந்திரவிதியாற்  கொடுத்துச்  செய்யுஞ்
செய்தி.    வேளாண்மைபற்றி   வேள்வியாயிற்று.  வேட்பித்தலாவது,
வேள்வி    யாசிரியர்க்கோதிய    இலக்கணமெல்லாம்  உடையனாய்,
மாணாக்கற்கு   அவன்   செய்த  வேள்விகளாற்  பெரும்  பயனைத்
தலைப்படுவித்தலை   வல்லனாதல்.   இவை   மூன்று  பகுதியவாதல்
போதாயனீயம் முதலியவற்றானுணர்க.கொடுத்தலாவது,வேள்வியாசானும் அவற்குத்  துணையாயினாரும்  ஆண்டு வந்தோரும் இன்புறுமாற்றான் வேளாண்மையைச் செய்தல். கோ