டலாவது,
கொள்ளத் தகும் பொருள்களை
அறிந்து கொள்ளுதல். உலகு கொடுப்பினும் ஊண் கொடுப்பினும் ஒப்ப நிகழும் உள்ளம் பற்றியுந், தாஞ் செய்வித்த வேள்விபற்றியுங் கொடுக்கின்றான் உவகைபற்றியுங், கொள்பொருளின் ஏற்றிழிவு பற்றியுந், தலை இடை கடையென்பனவுங் கொள்க. இனி
வேட்பித்தன்றித் தனக்கு ஓத்தினாற் கோடலுங் கொடுப்பித்துக் கோடலுந் தான் வேட்டற்குக் கோடலுந் தாயமின்றி இறந்தோர் பொருள்கோடலும் இழந்தோர் பொருள் கோடலும் அரசு கோடலுந் துரோணாசாரியனைப்
போல்வார் படைக்கலங் காட்டிக் கோடலும் பிறவுங் கோடற்பகுதியாம். பார்ப்பியலென்னாது பக்கமென்றதனானே பார்ப்பார் ஏனை வருணத்துக்கட்கொண்ட பெண்பாற்கட்டோன்றின வருணத்தார்க்குஞ் சிகையும் நூலும் உளவேனும் அவர் இயற்றிற்கெல்லாம் உரியரன்றிச் சிலதொழிற்கு உரியரென்பது கொள்க. உ-ம்: ‘‘ஓதல் வேட்ட லவைபிறர்ச் செய்த லீத லேற்றலென் றாறுபுரிந் தொழுகும் அறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி’’
(பதிற்றுப்.24) இஃது அந்தணர்க்குக்
கூறிய பொது. ‘‘முறையோதி னன்றி முளரியோ னல்லன் மறையோதி னானிதுவே வாய்மை - யறிமினோ வீன்றாள் வயிற்றிருந்தே யெம்மறையு மோதினான் சான்றான் மகனொருவன் றான்’’ இஃது
ஓதல். இனி ஓதற்சிறப்பும்
ஓதினாற்கு உளதாஞ் சிறப்புங் கூறுதலுங் கொள்க. ‘‘இம்மை பயக்குமா லீயக் குறைவின்றாற் றம்மை விளக்குமாற் றாமுளராக் கேடின்றா லெம்மை யுலகத்தும் யாங்காணேங் கல்விபோல் மம்ம ரறுக்கு மருந்து’’
(நாலடி.132) ‘‘ஆற்றவுங் கற்றா ரறிவுடையாரஃதுடையார் நாற்றிசையுஞ் செல்லாத நாடில்லை யந்நாடு வேற்றுநா டாகா தமவேயா மாதலா லாற்றுணா வேண்டுவ தில்’’
(பழமொழி) ‘‘ஒத்த முயற்சியா னொத்து வெளிப்படினு நித்திய மாக நிரம்பிற்றே - யெத்திசையுந் தாவாத வந்தணர்
தாம்
|